தளபதி 66 ஷூட்டிங் தமிழ்நாட்டிலேயே இல்லையாம் – இணையத்தில் வெளியான அப்டேட்!!

0
விஜய்யுடன் 5வது முறையாக இணைந்த மெகா காமெடி ஸ்டார் - தெறிக்க விடும் தளபதி66 லேட்டஸ்ட் அப்டேட்!!
விஜய்யுடன் 5வது முறையாக இணைந்த மெகா காமெடி ஸ்டார் - தெறிக்க விடும் தளபதி66 லேட்டஸ்ட் அப்டேட்!!

விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 66 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகவும், 2ம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடக்க உள்ளதாகவும் அப்டேட் கிடைத்துள்ளது.

தளபதி 66 அப்டேட் :

விஜய் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள, பீஸ்ட் திரைப்படம் 13ம் தேதி வெளியாகியது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம், தொடர்ந்து கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. படத்தின் வசூல் எதிர்பார்த்த அளவு இல்லை என்பதால், விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இந்த நிலையில், விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தின் ஷூட்டிங் அண்மையில் பூஜையுடன் தொடங்கியது.

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் இந்த படத்தில், விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்தப் படத்தின், முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்து உள்ளதாகவும், 2ம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடக்க உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதற்காக ஐதராபாத்தில் பிரமாண்ட செட் போடப்பட்டு வருவதாகவும் அப்டேட் கிடைத்துள்ளது. இதனை தளபதி ரசிகர்கள் பெரிய அளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here