வாரிசு பட ஷூட்டிங்கில் நடிகை ராஷ்மிகா செய்த காரியம்.., கையெடுத்து கும்பிட்ட தளபதி விஜய்!!

0
வாரிசு பட ஷூட்டிங்கில் நடிகை ராஷ்மிகா செய்த காரியம்.., கையெடுத்து கும்பிட்ட தளபதி விஜய்!!

சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் வாரிசு பட நடிகையான ராஷ்மிகா தளபதி விஜய்யை குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

வாரிசு படப்பிடிப்பு:

வம்சி பைடிபலி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து உருவாகி வரும் திரைப்படம் தான் வாரிசு. பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கும் இப்படத்தில் நடிகை ராஷ்மிகா, எஸ்.ஜே. சூர்யா, சரத்குமார், பிரபு, குஷ்பூ உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். தற்போது இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் வாரிசு படத்தின் மூலம் முதன் முதலாக இசையமைப்பாளர் தமன் தளபதியுடன் கைகோர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் நடிகை ராஷ்மிகா சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தளபதி விஜய்யை பற்றி பேசியுள்ளார். அதாவது தளபதி விஜய் தான் தன்னுடைய Crush என்றும், அவரை பார்த்ததும் சுற்றி போடுவது போல ரியாக்சனை தொடர்ந்து செய்து வந்தேன். அதனால் அவர் என்னை பார்த்து கையெடுத்து கும்பிட்டு, இது போன்று செய்ய வேண்டாம் என சொன்னார் என்று கூறியுள்ளார். மேலும் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரையில் ரசிகர்களுக்கு விருந்தாக வர இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here