ஒற்றை ஆளாக இருந்து இறுதி போட்டிக்கு முன்னேறிய ஒன்ஸ்.., கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்வாரா??

0
ஒற்றை ஆளாக இருந்து இறுதி போட்டிக்கு முன்னேறிய ஒன்ஸ்.., கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்வாரா??
ஒற்றை ஆளாக இருந்து இறுதி போட்டிக்கு முன்னேறிய ஒன்ஸ்.., கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்வாரா??

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடருக்கான அரையிறுதி ஆட்டத்தில் துனிசியா வீராங்கனை ஒன்ஸ் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு நுழைந்து அசத்தியுள்ளார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ்!!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் வீராங்கனை கரோலின் கார்சியா, துனிசியா வீராங்கனை ஒன்ஸ் ஜபீரை எதிர்கொண்டார். இந்த இருவருக்கும் இடையில் கடுமையான ஆட்டம் நடைபெற்றது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இதனால் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்ற ஆர்வம் ரசிகர்களிடையே அதிகமாக இருந்தது. இறுதியில் 6-1, 6-3 என்ற செட் கணக்கில் கார்சியாவை வீழ்த்தி ஒன்ஸ் ஜபீர் இறுதி போட்டிக்கு முன்னேறினார். இதை தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் போலந்து வீராங்கனை இகாஸ்விடெக், அரினாசபலெங்காவை எதிர்கொண்டார்.

இதில் சிறப்பாக விளையாடிய இகாஸ்விடெக் 3 – 6 , 6 – 1 , 6 – 1 என்ற கணக்கில் பெலாரஸ் வீராங்கனையை வீழ்த்தி வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இகாஸ்விடெக்கை, ஒன்ஸ் ஜபீர் எதிர்கொள்ள உள்ளார். இதில் வெற்றி பெறும் நபர் இந்த ஆண்டு அமெரிக்க ஓபன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை தட்டிச் செல்வார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here