ஓய்வூதியம் பெறும் பயனர்கள் கவனத்திற்கு – இதை மட்டும் தயவு செஞ்சு தெரிஞ்சுக்காம இருக்காதீங்க!!

0
ஓய்வூதியம் பெறும் பயனர்கள் கவனத்திற்கு - இதை மட்டும் தயவு செஞ்சு தெரிஞ்சுக்காம இருக்காதீங்க!!

அரசு ஊழியர்கள், பணியாளர் வருங்கால வைப்பு நிதி வழியாக பெறும் சலுகைகள் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான  அனைத்து தகவல்களையும் இபிஎஃப்ஓ மூலம் அறிந்து கொள்ளும் முறைகளை கீழே காணலாம்.

தகவல் அறியும் முறை:

இபிஎஸ் சந்தாதாரர்களுக்கு, பிபிஓ என்ற 12 இலக்க எண்  வழங்கப்படுகிறது. இந்த எண், அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் வழங்கப்படும். ஆனால், இது  தனி ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள்  என தனித்தனியாக வழங்கப்படும். இந்த 12 இலக்க எண்ணை பயன்படுத்தி, பயனர்கள் தங்கள் ஓய்வூதிய நிலையை சரி பார்த்துக் கொள்ளலாம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

  • அதற்கு முதலில் epfindia.gov.in என்ற இணையதளம் சென்று, லாகின் செய்யவும்.
  • அங்கு ‘பென்சனர் போர்டல்’ என்பதை கிளிக் செய்யவும்.
  • இப்போது பென்சனர் போர்ட்டில் ‘வெல்கம் டு’ என்ற ஆப்ஷன் வந்ததும், ‘நோ யுவர் பிபிஓ நம்பர்’ என்பதை கிளிக் செய்யவும்.
  • வங்கி கணக்கு அல்லது பிஎப் எண்ணை உள்ளிட்டால் உங்களுக்கு பிபிஓ கிடைக்கும்.
  • இதை பயன்படுத்தி உங்கள் ஓய்வூதிய நிலையை சரி பார்க்க முடியும்.

இதில் உங்கள் பென்ஷன் ஸ்டேட்டஸ் பார்க்க மேலே உள்ள வழிமுறைகளை மீண்டும் செய்து “ஸ்டேட்டஸ் ரிசீவ்டு” என்பதை கிளிக் செய்தால், ஓய்வூதியம் தொடர்பான முழு தகவல்களும் உங்களுக்கு தெரியும். இதை அறிந்து நீங்கள் ஓய்வூதிய விவரங்களை சுய பரிசோதனை செய்து கொண்டால், உங்கள் பணத்தை யாராலும் ஏமாற்ற முடியாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here