வைகைப்புயல் வடிவேலு சினிமாவில் அறிமுகமானது இப்படித்தான் – ரகசியங்களை உடைத்த பழம்பெரும் நடிகர்!!

0
இதுவரையிலும் யாரும் பார்த்திராத வடிவேலு மருமகள் யார் தெரியுமா?? புகைப்படம் உள்ளே!!
வைகைப்புயல் வடிவேலு சினிமாவில் அறிமுகமானது இப்படித்தான் - ரகசியங்களை உடைத்த பழம்பெரும் நடிகர்!!

காமெடி ஜாம்பவானாக திகழ்ந்துவரும் வைகைப்புயல் வடிவேலு, சினிமாவில் எப்படி அறிமுகமானார் என்பதை பழம்பெரும் நடிகர் ராஜ்கிரண் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

வடிவேலு சினிமா பயணம்:

தமிழ் சினிமாவில் தனி காமெடி சாம்ராஜ்யம் நடத்தி வருபவர் வைகைப்புயல் வடிவேலு. கோலிவுட்டின் அனைத்து முன்னணி ஹீரோக்களின் படங்களிலும் இவர் நடித்து விட்டார். இவர் சினிமாவில் அறிமுகமானது குறித்து நடிகர் ராஜ்கிரண் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தனது ரசிகர், திருமணத்தை நடத்தி வைக்க மதுரை சென்றிருந்த ராஜ்கிரண், மதுரையில் இருந்து சென்னை வரும் வழியில் பேச்சுத் துணைக்காக இருக்கட்டும் என ஒருவரை, ரசிகர் ராஜ்கிரனுடன் அனுப்பி வைத்தார். அப்படி அனுப்பி வைக்கப்பட்டவர் தான் வடிவேலு. அப்போது, ரயிலில் பல சுவாரசிய கதைகளை சொல்லி ராஜ்கிரணை சிரிக்க வைத்தவர் சினிமாவில் வாய்ப்பு வேண்டும் என்று கேட்கவில்லையாம்.

அதேபோல் ராஜ்கிரணுக்கும் இவரை சினிமாவில், நடிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றவில்லையாம். இப்படி இருக்கையில், யாருடைய சிபாரிசும் இல்லாமல், சுயம்புவாக தன் திறமையால் சினிமாவுக்கு வந்தவர் தான் நடிகர் வடிவேலு என ராஜ்கிரண் பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்த கருத்துக்கள் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here