பொங்கலுக்கு தொடர் விடுமுறை., இந்த மாநிலத்தில் பள்ளிகளுக்கு 5 நாட்கள், கல்லூரிகளுக்கு 3 நாட்கள் லீவு!!

0

தெலுங்கானா மாநிலத்தில் சங்கராந்தி என்ற பெயரில், கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கல்வி நிறுவனங்களுக்கு எத்தனை நாள் விடுமுறை என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அறிவிப்பு வெளியீடு:

பொங்கல் என்ற பெயரில், தமிழர்களுக்கான இந்த பண்டிகை தமிழகத்தில் கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில், வட மாநிலங்களில் வேறு வேறு பெயர்களில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் தெலுங்கானா மாநிலத்தில் சங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடப்படும் இந்த பண்டிகைக்கு, கல்வி நிறுவனங்களுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை விடப்படும் என்ற அறிவிப்பை மாநில கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

பொங்கலுக்காக பள்ளிகளுக்கு வருகிற ஜனவரி 13ஆம் தேதி முதல், 17ம் தேதி வரை 5 நாட்களுக்கு தொடர் விடுமுறை விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரவு 8 மணிக்கு மேல் தம்பதிகள் இணையக்கூடாது.., அமைச்சர் அறிவிப்பால் அதிர்ந்த இணையம்!!!!

அதேபோல் கல்லூரிகளுக்கு வரும் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை, 3 நாட்களுக்கு விடுமுறை அளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறைகள் அனைத்தும் முடிந்தும் பள்ளிகள் வரும் 18 ஆம் தேதியும், கல்லூரிகள் வரும் 16ஆம் தேதி திறக்கப்படும் என தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here