சுவையான சர்க்கரைப் பொங்கல் – செய்வது எப்படி?

0
Sweet Pongal Recipe

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் தை மாதத்தில் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. அத்திருநாளில் சுவையான சர்க்கரைப் பொங்கல் எளிமையாக செய்வது எப்படி என்பது குறித்துக் காண்போம்.

தேவையான பொருள்கள்

பச்சரிசி – 1/2 கப்

பாசிப்பருப்பு – 3 டேபிள் ஸ்பூன்

வெல்லம் – 3/4 கப் (நன்கு பொடியாக தட்டியது)

தண்ணீர் – 4 கப்

நெய் – 4 டேபிள் ஸ்பூன்

உலர் திராட்சை – 12-15

முந்திரி – 8-10

ஏலக்காய் – 2 (தட்டியது)

கிராம்பு – 2 (தட்டியது)

சூடம் – 1 சிட்டிகை (விருப்பமானால்)

செய்முறை

தொடக்கத்தில் பச்சரிசியை நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு சிறிய குக்கரை அடுப்பில் வைத்து அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பாசிபருப்பினை பொன்னிறமாக வறுக்கவும்.

பின்பு குக்கரில் மூன்று கப் தண்ணீர் ஊற்றி, கழுவிய பச்சரிசியை போட்டு, குக்கரை மூடவும். பின்பு அடுப்பினை அதிகப்படியான நெருப்பில் வைத்து 1 விசில் விட்டு பின்பு நெருப்பினை குறைத்து 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.

மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து 1 கப் தண்ணீர் ஊற்றி அதில் தட்டிய வெல்லதைப் போட்டு கரைக்க வேண்டும். நன்கு கரைந்தவுடன் அதனை வடிகட்டி கொள்ள வேண்டும்.

பின்பு பச்சரிசி வேக வைத்த குக்கரினை திறந்து அதில் வெல்லப் பாகுவை ஊற்றி மீண்டும் அடுப்பில் வைக்க வேண்டும். மேலும் அதில் ஏலக்காய், கிராம்பு மற்றும் தேவைப்பட்டால் சூடம் சேர்ந்து மூன்று முதல் 4 நிமிடம் நன்கு கிளற வேண்டும்.

பின்பு வேறொரு வாணலியில் நெய் ஊற்றி அதில் முந்திரி மற்றும் உலர் திராட்சையை சேர்த்து பொன்னிறமாக வருது அதனை குக்கரில் உள்ள போன்களில் ஊற்றி நன்றாக கிளறினால் சுவையான சர்க்கரைப் பொங்கல் தயார்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here