அசைவ பிரியர்களே.., சோம்பேறி சிக்கன் சாப்பிட்டு இருக்கீங்களா?? மிஸ் பண்ணாம ட்ரை பண்ணுங்க!!

0
அசைவ பிரியர்களே.., சோம்பேறி சிக்கன் சாப்பிட்டு இருக்கீங்களா?? மிஸ் பண்ணாம ட்ரை பண்ணுங்க!!
அசைவ பிரியர்களே.., சோம்பேறி சிக்கன் சாப்பிட்டு இருக்கீங்களா?? மிஸ் பண்ணாம ட்ரை பண்ணுங்க!!

உங்களுக்கு சிக்கன் ரெசிபி சமைக்க ரொம்ப சோம்பேறியா இருக்கா, அப்போ ஈஸியான முறையில் செய்யக்கூடிய இந்த சோம்பேறி சிக்கன் ரெசிபி செஞ்சு பாருங்க.

தேவையான பொருட்கள்:

1. சிக்கன் – 1/2

2. மல்லி தூள் – 1 டீஸ்பூன்

3. மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்

4. கரம் மசாலா – 1 டீஸ்பூன்

5. பட்டர் – 2 டீஸ்பூன்

6. எண்ணெய் – 2 டீஸ்பூன்

7. உப்பு – தேவையான அளவு

8. கஸ்தூரி மேத்தி – 1 டீஸ்பூன்

9. கொத்தமல்லி இலைகள் – சிறிதளவு

10. இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்

11. தக்காளி – 1

12. பெரிய வெங்காயம் – 2

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

செய்முறை விளக்கம்:

இந்த சோம்பேறி சிக்கன் ரெசிபி செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள சிக்கனை கழுவி சுத்தம் பண்ணி அதில் போட்டு கொள்ளவும். பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காய துண்டுகளையும்,நறுக்கி வைத்துள்ள தக்காளியையும் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யவும்.பின் அதோடு 2 டீஸ்பூன் மிளகாய் தூள், ஒரு டீஸ்பூன் மல்லி தூள், ஒரு டீஸ்பூன் கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யவும்.

பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், ஒரு டேபிள் ஸ்பூன் ஆயில், ஒரு ஸ்பூன் கஸ்தூரி மேத்தி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து சிக்கனில் மசாலா சேரும்படி நன்றாக கலந்து கொள்ளவும். பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் ஒரு டீஸ்பூன் ஆயில் சேர்த்து கொள்ளவும். பின் நாம் மசாலா சேர்த்து வைத்துள்ள சிக்கனை அதில் போட்டு நன்றாக வதக்கவும். பிறகு அதில் ஒரு ஸ்பூன் பட்டர் சேர்த்து கடாயை மூடி போட்டு மூடி விடவும். ஒரு 10 நிமிடங்களுக்கு பிறகு அடுப்பை ஆப் செய்யவும்.இப்போ நமக்கு சுவையான சோம்பேறி சிக்கன் ரெசிபி ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here