வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க 20 லட்சம் பேர் விண்ணப்பம் – தமிழக தேர்தல் ஆணையம்!!

0

தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் இறுதியில் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தல் வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்ய இன்றே கடைசி நாள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சட்டமன்ற தேர்தல்:

தமிழகத்தில் வருகிற மே மாதம் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான வேலைகளை தேர்தல் ஆணையம் விரைவாக செய்து வருகிறது. தமிழ்நாடு, புதுவை, மேற்கு வங்காளம், கேரளா, அசாம் போன்ற மாநிலங்களிலும் ஏப்ரல் மதம் தேர்தல் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் சட்டசபை அரசியலுக்கான 234 தொகுதிகளுக்கான சின்னங்களை இன்று தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொண்டு வருகிறது. இதுவரை வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க 20.62 லட்சம் பேரும் புதிதாக பெயர் மாற்ற, நீக்க மற்றும் திருத்த என 29.72 லட்சம் பேரும் விண்ணப்பித்துள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரி தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள இன்றே கடைசி நாள் என தேர்வாணையம் தெரிவித்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் நெரிசலை கட்டுப்படுத்த அதிக வாக்குச்சாவடிகள் அமைத்து அதிகம் பணியாளர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். ஒருபக்கம் தேர்தலுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் நடத்தும் நிலையில் மற்றொரு பக்கம் அரசியல் கட்சிகள் தங்கள் கட்சியில் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர்.

தனது அம்மாவை வீட்டிற்கு அழைத்து செல்லும் பாக்கியா, அவரது குடும்பத்தில் ஏற்றுக்கொள்வார்களா??

அடுத்து வரும் தேர்தலில் இருபெரும் ஆளுமை தலைவர்களான கருணாநிதியும், ஜெயலலிதாவும் இல்லாமல் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தேர்தலை சந்திக்கின்றன. மேலும் மற்ற புதிய கட்சிகளும் தங்கள் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளன. வாக்களிப்பது மக்களின் தேசிய கடமை ஆகையால் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here