‘பாத்ததும் காதல்ல விழுந்துட்டேன்’ சூட்கேசை மணமுடித்த இளம்பெண் – ரஷ்யாவில் வினோதம்!!

0

கடந்த சில ஆண்டுகளில் உலகம் முழுவதும் பல்வேறு விதமான திருமணங்கள் வைரலாகி வருகிறது. சுயபாலின திருமணம், பொம்மையை திருமணம் செய்து கொள்வது, வளர்ப்பு பிராணியை திருமணம் செய்வது… இவ்வளவு ஏன்? தன்னை தானே திருமணம் செய்து கொள்வது போன்ற செயல்களால் உலகை வியப்புக்கு உள்ளாக்கியுள்ளனர் இந்த வெளிநாட்டு மக்கள். இந்நிலையில் ரஷ்யாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சூட்கேசை திருமணம் செய்து கொண்டாராம்.

சூட்கேஸ் கணவர்

ரஷ்யாவில் 24 வயதான இளம்பெண் ஒருவர் தான் சூட்கேசை காதலித்து திருமணம் செய்துள்ளதாக கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. ரெய்ன் ஜார்டன் என்ற பெண்மணி சூட்கேசை திருமணம் செய்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அவரிடம் இத்திருமணம் பற்றி கேட்ட போது, சிறுவயதில் இருந்தே பொருட்களின் மீது ஈர்ப்பு இருப்பதாகவும், இந்த சூட்கேஸ் மீது காதல் வயப்பட்டு திருமணம் செய்துகொண்டதாகவும் கூறினார். மேலும் அவருக்கு ஒரு ஆண் காதலன் இருக்கிறார், இருப்பினும் தற்போது சூட்கேஸ் மீது காதல் வயப்பட்டு அதனை திருமணம் செய்துகொண்டதாக கூறினார். மனிதர்களை விட அவரது கணவருடன்(சூட்கேஸ்) இருக்கும்போதுதான் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.

2015ம் ஆண்டு முதன்முதலாக அவருடைய கணவனான சூட்கேசை பார்த்ததாகவும், ஒரு போட்டோஷூட்டிற்காக கடையில் அதனை வாங்கியதாகவும் தெரிவித்தார். முதல்முறை சூட்கேசை பார்த்த போதே காதலில் விழுந்துவிட்டாரம் அவர். அவரது கணவர் பெயர், ஜிடியான். அவருடன் பேசுவாரம், அவர் பேசுவதை இவர் கேட்பாராம். அவர்களுக்குள் ஒரு அற்புதமான உரையாடல் நிகழுமாம்.

ஆன்லைன் கேமில் ரூ.11 லட்சம் செலவிட்ட சிறுவன்!

அந்த சூட்கேஸ் வெறும் துணை மட்டுமல்ல, ஒரு நல்ல கணவர், நல்ல நண்பர் என்றார். மக்கள் பலரும் அவரை புரிந்துகொள்ளாமல் நீ உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறாய் அதற்க்கான சிகிச்சை எடுத்துக்கொள் எனவும் கூறுகின்றனர். மக்கள் எனது உணர்வுகளை புரிந்துகொள்ள வேண்டும் அவர்களுக்கு புரியாத ஒன்றை புரிய வைக்க முடியாது. எதை வைத்தும் மற்றவர்களை எடை போடக்கூடாது என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here