வரும் 18ம் தேதி பதவியேற்கும் தமிழகத்தின் புதிய ஆளுநர்? – வெளிவந்த முக்கிய தகவல்!!

0

தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி  வருகிற 18ம் தேதி மாநிலத்தின் ஆளுநராக  பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

புதிய ஆளுநர்:

தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் மாற்றப்பட்டு புதிய ஆளுநராக ஆர்.என்.ரவியை நியமித்து கடந்த சில நாட்களுக்கு முன் குடியரசு தலைவர் அறிவிப்பு வெளியிட்டார்.  இதையடுத்து, தமிழ்நாடு மாநில ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் நிரந்தர ஆளுநராக பஞ்சாப் செல்ல இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னால், ஏற்கனவே பஞ்சாப் பொறுப்பு ஆளுநராகவும், சண்டிகர் நிர்வாகியாகவும் இருந்த இவர் தற்போது நிரந்தரமாக அங்கு செல்வதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து, கடந்த  2012 இல் புலனாய்வு பணியகத்தின் சிறப்பு இயக்குனராகவும், 2014 ம் ஆண்டு முதல் கூட்டு புலனாய்வு குழுவின் தலைவராகவும் இருந்த ஆர்.என்.ரவி தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னால் இவர் நாகலாந்து மாநிலத்தின் ஆளுநராக இருந்தது குறிப்பிடத் தகுந்தது. இந்த நிலையில், வருகிற 18ம் தேதி இவர் தமிழகத்தின் ஆளுநராக பதவியேற்க உள்ளதாக தகவல் வந்துள்ளது.  அவருக்கு உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைப்பார் எனவும், இந்த அரசு நிகழ்ச்சியில் முதல்வர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் முக்கிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here