கர்ப்பமானதை வீட்டில் சொன்னதற்காக ஜெனியிடம் கோபித்துக் கொள்ளும் செழியன்… பாக்கியலட்சுமி இன்றைய கதைக்களம்!!!

0

ஏராளமான ரசிகர்களை கொண்டு வெற்றி சீரியலாக ஓடிக்கொண்டிருக்கும் விஜய் டிவி சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று, தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை வீட்டில் சொன்னதற்காக ஜெனியிடம் கோபத்தை காட்டுகிறார் செழியன்.

பாக்கியலட்சுமி சீரியல்

பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனிக்கு உண்டாகியிருக்கும் குழந்தையை வீட்டில் இருக்கும் யாருக்கும் தெரியாமல் கலைக்க நினைக்கிறார் செழியன். அதனால் மிகுந்த வேதனையில் இருக்கிறார் ஜெனி. இந்நிலையில் ஜெனியின் வாயிலாக அவர் கர்ப்பமாக இருப்பதை அறிந்து கொள்ளும் பாக்கியா இந்த மகிழ்ச்சியான விஷயத்தை வீட்டில் இருக்கும் அனைவரிடமும் கூறுகிறார். இதனால் கடும் கோபத்தில் இருக்கிறார் செழியன்.

இந்நிலையில் இன்றைய கதையில், செல்வி ஜெனியின் கர்ப்பம் குறித்து கேலியும் கிண்டலுமாக பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பாக்கியா ஜெனியிடம், உங்க அப்பா, அம்மா கிட்ட சொல்ல வேண்டுமா? என கேட்க அதற்கு ஜெனி அப்பறமாக சொல்லலாம் என கூறுகிறார். அதன் பின்னர் கர்ப்ப கால அனுபவங்கள் பற்றி செல்வி கூறிக் கொண்டிருக்கிறார்.

அதன் பின்னர் டாக்டரிடம் போவது பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்த சந்தோசத்தை கொண்டாட இனிப்பு செய்ய போவதாக சொல்லி விட்டு சமையலறைக்கு செல்கிறார் பாக்கியா. இதையடுத்து கோபி மற்றும் மையூ ராதிகா வீட்டில் செஸ் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.அந்த நேரத்தில் கையில் காபி கப் உடன் ராதிகா வருகிறார். அப்பொழுது கார் வாங்குவது பற்றி ராதிகா கோபியிடம் சொல்கிறார்.

மேலும் லோன் வாங்கி தான் கார் வாங்க உள்ளதாக கூறுகிறார். இவ்வாறு இருவரும் கார் வாங்குவது பற்றி பேசிக்கொண்டு இருக்கின்றனர். இதையடுத்து மிகுந்த சோகத்தில் மாடியின் படிக்கட்டில் அமர்ந்து இருக்கும் ஜெனியை பார்த்து பாக்கியா என்னாச்சு ஏன் இப்படி சோகமாக இருக்க என திரும்ப திரும்ப கேட்கிறார்.

அப்பொழுது ஜெனி, செழியனுக்கு இப்போ குழந்தை பெத்துக்குறதுல இஷ்டம் இல்லை. மொத வாழ்க்கையில செட்டில் ஆவோம் என  நினைப்பதாக ஜெனி கூறுகிறார். அதற்கு பாக்கியா குழந்தை பிறந்தா எல்லாம் சரியாகி விடும் என சமாதானம் கூறுகிறார் பாக்கியா.

மேலும் செழியன், எழில் மற்றும் இனியா பிறந்த கதையை பற்றி கூறுகிறார் பாக்கியா. இருப்பினும் மனதில் குழப்பத்துடன் இருக்கிறார் ஜெனி. இந்நிலையில் ஜெனி,செழியன் மற்றும் பாக்கியா மூவரும் டாக்டரரை பார்க்க ஹாஸ்பிடலுக்கு செல்கின்றனர்.

அங்கும் செழியன் ஜெனியிடம் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சொன்னதற்காக திட்டுகிறார். இந்நிலையில் பாக்கியா கர்ப்பம் உறுதி ஆகிவிட வேண்டும் என கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொண்டு இருக்கிறார். இதையடுத்து மூவரும் டாக்டரிடம் செல்கின்றனர்.

அங்கு ஜெனியை பரிசோதிக்கும் டாக்டர் குழந்தை உண்டாகி 60 நாட்கள் ஆனதாக கூறுகிறார். இதை கேட்டு செழியன் அதிர்ச்சியில் இருக்க பாக்கியா மற்றும் ஜெனி மகிழ்ச்சியில் இருக்கின்றனர். இத்துடன் இன்றைய கதை முடிவடைகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here