சட்டசபை கூட்டத்தொடர் ஆளுநர் உரை – புதிய அறிவிப்புகள்

0
சட்டசபை கூட்டத்தொடர் ஆளுநர் உரை

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் ஆளுநர் உரையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள் அறிவித்த அறிவிப்புகள் பின்வருமாறு,

* இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை தர மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்

*மாற்றுத்திறனாளிகளுக்கு 4 % இட ஒதுக்கீட்டில் பணியிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன

* நாகை மாவட்டம் வெள்ளக்குப்பத்தில் ரூ.100 கோடியில் மீன் பிடித்துறைமுகம் அமைக்கப்படும்

* எரிசக்தி உற்பத்தி திறனில் உலகளவில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக பாராட்டு

*நதிகள் இணைப்பு திட்டத்தின் முதற்கட்டமாக காவிரி-தெற்கு வெள்ளாறு இந்த ஆண்டு இறுதிக்குள் இணைக்கப்படும்

*110 விதியின் கீழ் 453 அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்ட நிலையில் அதில் 114 அறிவிப்புகள் நிறைவேற்றம்

* 12,000 கிராமங்களில் ”தமிழ் நெட்” திட்டம் செயல்படுத்தப்படும்

* அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க ரூ.1 கோடி தமிழக அரசு நிதி

*தாம்பரம் -வேளச்சேரி இடையே 15 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதை அமைக்கப்படும்

*வறுமையை கணக்கிடுவதற்கு அசையாச் சொத்தின் மதிப்பு ரூ.1 லட்சமாக அளவுகோல் உயர்த்தப்பட்டுள்ளது

*மேகதாதுவில் கர்நாடக அணைகட்ட தமிழக அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது

* எந்த மதத்தை பின்பற்றினாலும் அவர்களின் நலனை தமிழக அரசு பேணும்

*காவிரி -குண்டாறு இணைப்புத் திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றும்

* டெங்கு, மலேரியாவை தடுக்க மக்களுக்கு விலையில்லா கொசுவலைகள் வழங்கப்படும்

* கல்லூரி இடைநிற்றல் மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சி

*பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 6.94 லட்சம் வீடுகள் கட்டப்படும்

* மெட்ரோ ரயில் தடத்தை விமானநிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை நீட்டிக்க ஆய்வு செய்யப்படும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here