தமிழக அரசு ஊழியர்களே., அகவிலைப்படி உயர்வு & நிலுவை தொகை இப்போது கிடையாது? ஷாக்கிங் நியூஸ்!!!

0

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 2024 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தி உள்ளதாக அண்மையில் அறிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து மார்ச் மாத ஊதியத்தில் அகவிலைப்படி உயர்வோடு, நிலுவை தொகையும் வழங்கப்படும் என ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்பார்த்து வந்தனர். இந்த நிலையில் சென்னை கருவூல கணக்குத் துறை ஆணையாளர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகல்.. CSK அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் அறிவிப்பு!!

அதாவது ஏப்ரல் 2ஆம் தேதி முதல் தான் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தி வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் உயர்த்தப்பட்ட அகவிலைப்படியின் பணப்பலன், 2024 ஏப்ரல் மாத ஊதியத்துடன் வழங்கப்படும். அதேபோல் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய 3 மாதங்களுக்கான அகவிலைப்படி நிலுவை தொகை, ஏப்ரல் 2வது வாரத்தில் தான் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here