தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி ஆல்பாஸ் – தேர்வை ரத்து செய்து முதல்வர் உத்தரவு..!

0

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்கக்கோரி தொடங்கப்பட்ட வழக்கு வரும் 11ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும் நிலையில், இன்று பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக முதல்வர் அவர்கள் அறிவித்து உள்ளார்.

பள்ளிப் பொதுத்தேர்வுகள்:

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் ஜூன் 15ம் தேதி முதல் தொடங்க இருந்த நிலையில் அதனை தள்ளிவைக்குமாறு ஆசிரியர்கள் சங்கம் மற்றும் பல்வேறு கட்சிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இதன் முடிவில் கொரோனா பரவல் கட்டுக்குள் வராத நிலையில் தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மற்றும் 11ம் வகுப்பிற்கு விடுபட்ட பாடங்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக முதல்வர் அறிவித்து உள்ளார்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட காரணத்தால் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பிற்கு விடுபட்ட பாடங்களுக்கு அரையாண்டு, காலாண்டு தேர்வுகளின் மதிப்பெண்கள் அடிப்படையில் 80 சதவீத மதிப்பெண்கள் மற்றும் வருகைப் பதிவேடு அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் 12ம் வகுப்பில் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என முதல்வர் அவர்கள் அறிவித்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here