தமிழக மீனவர்களே., 2 நாட்களுக்கு கடலுக்கு செல்ல தடை., அரசு அதிரடி உத்தரவு!!!

0

தமிழகத்தில் ராமேஸ்வர மீனவர்களை அடிக்கடி, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து வருகின்றனர். இதனை கண்டித்து கடந்த ஒரு வாரமாக ராமேஸ்வர மீனவ சங்கங்கள் போராட்டம் நடத்தியதால், நேற்று முன்தினம் (பிப்.25) பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன்பின் நேற்று (பிப்.26) முதல் ராமேஸ்வர மீனவர்கள் கடலுக்கு சென்று வருகின்றனர். இந்த சூழலில் பிரதமர் மோடி, அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழகத்திற்கு வருகை தர உள்ளார்.

இதனால் பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடலோர பாதுகாப்பு படை தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் இன்றும் (பிப்.27) நாளையும் (பிப்.28) மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவித்துள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

ஆதார் அட்டை புதுப்பிக்க இது தான் கடைசி தேதி..,  UIDAI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here