தமிழக வேளாண் பட்ஜெட் 2024-25: Live Updates!!!

0
தமிழக வேளாண் பட்ஜெட் 2024-25: Live Updates!!!
தமிழக வேளாண் பட்ஜெட் 2024-25: Live Updates!!!

தமிழகத்தில் 2024-25ஆம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை நேற்று (பிப்.19( நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ள நிலையில், இன்று (பிப்.20) வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ளார்.

12:30 P.M.:

2024 – 25ஆம் ஆண்டிற்கான தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கலை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் நிறைவு செய்தார்.

12:00 P.M.:

சத்தியமங்கலம் செவ்வாழை, திருநெல்வேலி அவுரி, செங்காந்தள் விதை உள்ளிட்ட 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற ரூ.30 லட்சம் ஒதுக்கீடு.

50,000 ஏக்கரில் நிலக்கடலை போன்ற வேளாண் பயிர்ககளுக்கு, ஜிப்சம் வழங்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு.

11:50 A.M.:

புதிய அரசு தோட்டக்கலை பண்ணைகள், பூங்காக்கள் அமைத்திட 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

சிறு குறு விவசாயிகளுக்கு, வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை மானியத்தில் வழங்க ரூ.170 கோடி நிதி ஒதுக்கீடு

207 தனியார் வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்க, ரூ.32.90 கோடி மானியம்.

நிரந்தர பந்தல் அமைத்து காய்கறிகள் பயிரிடும் விவசாயிகளை ஊக்குவிக்க ரூ.9.40 கோடி நிதி ஒதுக்கீடு

ரூ.10 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு தோட்டக்கலை பண்ணைகள், பூங்காக்கள் அமைக்கப்படும்.

11:40 A.M.:

அரசு தோட்டக்கலை பண்ணை மற்றும் விவசாயிகளின் நிலங்களில் தானியங்கி மின்னணு பாசன வசதிக்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு. இதன்மூலம் 12,000 விவசாயிகள் பயனடைவார்கள்.

அதேபோல் 10 அரசு தோட்டக்கலைப் பண்ணையில் தானியங்கி நீர்ப்பாசன அமைப்புகள் நிறுவ, ரூ,.2.50 கோடி நிதி ஒதுக்கீடு.

எள் சாகுபடி விரிவாக்க திட்டத்திற்கு ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு.

பருத்தி விவசாயிகளின் நலனுக்காக சாகுபடிக்கு ரூ.14.20 கோடி நிதி ஒதுக்கீடு.

சூரிய சக்தி மின்வேலிகள் அமைக்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.

11:35 A.M.:

சர்வதேச தோட்டக்கலை பண்ணை இயந்திர கண்காட்சி அமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.

உகந்த வாழை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்ய ரூ.12.73 கோடி நிதி ஒதுக்கீடு.

பகுதிசார் தோட்டக்கலை சாகுபடிக்கு ரூ.2.70 கோடி நிதி ஒதுக்கீடு.

மா, பலா, வாழை எனும் முக்கனி மேம்பாட்டுக்கான சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த ரூ.41.35 கோடி ஒதுக்கீடு.

பலா பதப்படுத்தும் கூடங்கள் அமைக்க ரூ.1.14 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

11:28 A.M.:

ரூ.22.50 கோடி செலவில் களர் அமில நிலங்களை சீர்படுத்த நிதி ஒதுக்கீடு.

50,000 ஏக்கரில் துவரை பருப்பு சாகுபடி செய்ய ரூ.17.50 கோடி நிதி ஒதுக்கீடு.

வேளாண் சார்ந்த தொழில் தொடங்க ஆர்வமுள்ள பட்டதாரி இளைஞர்களுக்கு, மானியம் வழங்க ரூ.1 கோடி ஒதுக்கீடு.

11:23 A.M.:

தமிழ்நாடு முழுவதும் இதுவரை 4,773 குளங்கள், ஊரணிகள் தூர்வாரப்பட்டு, 1,564 பண்ணைக் குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன

காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்படாத வகையில், ரூ.1.48 கோடி செலவில் சிறப்பு வேளாண் கிராமங்களை உருவாக்கப்படும்

4.75 லட்சம் ஏக்கரில் பயறு பெருக்கம் திட்டத்தை செயல்படுத்த ரூ.40.27 கோடி ஒதுக்கீடு.

பசுமை உரங்களை தயாரித்து மண்ணின் வளத்தை பெருக்க ரூ.6.27 கோடி ஒதுக்கீடு.

11:20 A.M.:

நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தின் உற்பத்தி திறனை மேம்படுத்துவதற்காக ரூ.773.23 கோடி நிதி ஒதுக்கீடு.

ரூ.3.60 கோடி மதிப்பீட்டில் கன்னியாகுமரியில் தேனீ முனையம் அமைக்கப்படும்.

வேளாண் காடுகள் திட்டத்தின் கீழ் பூச்சி, நோய் தாக்குதல்களை கட்டுப்படுத்த ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு.

11:10 A.M.:

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு.

சிறந்த விவசாயிக்கான நம்மாழ்வார் விருதுகளை வழங்க ரூ. 5 லட்சம் ஒதுக்கீடு செய்வதோடு, அவர்களுக்கு பாராட்டுப்பத்திரம் மற்றும் பணப்பரிசும் வழங்கப்படும்

11:05 A.M.:

சூரியகாந்தி விரிவாக்கத்திற்கு 12,500 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்ய திட்டம்.

எண்ணெய் வித்துப் பயிர் சாகுபடியை விரிவாக்கத்திற்கு ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு.

200 மெட்ரிக் டன் பாரம்பரிய நெல் ரகங்களை 10,000 ஏக்கரில் சாகுபடி செய்ய ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு.

10:55 A.M.:

2,482 கிராம ஊராட்சிகளில் உள்ள நிலத்தின் மண் பரிசோதனை செய்ய ரூ.6.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதால் 2 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவார்கள்.

ஆடாதொடா, நொச்சி போன்ற உயிரி பூச்சிக்கொல்லி தாவரங்களை வளர்க்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு.

வேப்ப மரக்கன்றுகள் இலவசமாக வழங்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.

10:37 A.M.:

தமிழ்நாடு அரசின் நெல் கொள்முதல் ஊக்கத்தொகைக்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு.

உணவு பாதுகாப்பினை உறுதி செய்யும் உணவு மானியத்திற்கு ரூ.10,500 கோடி ஒதுக்கீடு.

பயிற்சி பெற்ற பண்ணைமகளிர் சுய உதவிக்குழுக்களை கொண்டு தென்னை நாற்றுப்பண்ணைகளை அமைக்க ரூ.2.40 கோடி நிதி ஒதுக்கீடு.

ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்போரின் முதலீட்டு கடனுக்கான வட்டி மானியங்களை வழங்க ரூ.200 கோடி ஒதுக்கீடு.

10:25 A.M.:

22 இனங்களுடன் கூடிய 2 லட்சம் விவசாயிகள் பயனடைய உள்ள “மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்” திட்டத்திற்காக ரூ.206 கோடி நிதி ஒதுக்கீடு

நிரந்தர மண்புழு உரத்தொட்டி, உரப்படுக்கை அமைக்க ரூ.5 கோடி மானியம்.

10,000 விவசாயிகளுக்கு தலா 2 மண்புழு உரப்படுக்கை வழங்கிட ரூ.6 கோடி மானியம்.

10.06 A.M.

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்”- என்ற திருக்குறளுடன் பட்ஜெட் உரையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ளார்.

தென் தமிழக மாவட்டங்களில் பெருமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு, விரைவில் இழப்பீடு வழங்க ரூ.208.20 கோடி நிதி ஒதுக்கீடு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here