என்னடா இது விஜய் டிவிக்கு வந்த சோதனை – இந்த வாரமும் விஜய் டிவிக்கு பெரிய அடி!!!

0

ஒரு தொலைக்காட்சியின் தரத்தை நிர்ணயிப்பது டிஆர்பி ரேட்டிங். இதனை வைத்துதான் முன்னனி தொலைக்காட்சி எது என்பதனை விளம்பரதாரர்களால் அறிந்துகொள்ள முடியும். டிஆர்பியில் ஜீ தமிழ் நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது. மூன்றாம் இடத்தினை கே டிவி பிடித்து உள்ளது.

இந்த வாரமும் விஜய் டிவிக்கு பெரிய அடி:

ஒரு தொலைக்காட்சிக்கு வருமானம் முழுவதுமே விளம்பரங்களில் இருந்துதான் வரும். விளம்பரதாரர்கள் எந்த தொலைக்காட்சிக்கு, எந்த நிகழ்ச்சிக்கு விளம்பரங்களை வழங்கினால் அதிக மக்களிடம் சென்றடையும் என்பதை பார்த்துதானே வழங்குவார்கள். அவர்களின் அத முடிவுகளில் மிக முக்கிய இடம் TRP க்கு உண்டு. கொரோனா லாக்டவுன் காரணமாக புது நிகழ்ச்சிகள் ஒளிபரபாகாத நிலையில் விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் ஆகியவை அதிகம் பாதிப்பை சந்தித்துள்ளன.

தற்போது கொரோனா பரவல் காரணமாக சேனல்கள் பழைய நிகழ்ச்சிகளை தான் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பி வருகிறார்கள். அதனால் டிஆர்பியில் பெரிய தாக்கம் ஏற்பட்டு இருக்கிறது. அதிலும் குறிப்பாக விஜய் டிவி, ஜீ தமிழ் தான் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது இந்த வருடத்தின் 22வது வாரத்திற்கான (மே 29, 2021 முதல் ஜூன் 4, 2021) ரேட்டிங் விவரங்கள் வெளிவந்திருக்கிறது. அதில் சன்டிவி தான் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.

இதில் அதிக ரசிகர்ளை பெற்றுள்ள சன்டிவியின் ரோஜா சீரியலுக்கு 3-வது இடம் கிடைத்துள்ளது. இந்த டிஆர்பி ரே்டிங்கில் முதல் 5 இடங்களில் 4 இடங்களை சன்டிவி பெற்றுள்ளது. இதில் 4-வது இடத்தில் மட்டும் விஜய் டிவியின் மூக்குத்தி அம்மன் படம் இடம் பிடித்துள்ளது. வழக்கமாக விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் தான் டாப் 5குள் இடத்தை பிடிக்கும். ஆனால் இந்த முறை அது இடம்பெறவில்லை. ஐந்தாவது இடத்தில் சன் செய்திகள் உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here