கறுப்பினத்தவர் ஜார்ஜ் பிளாய்ட் கொலையை படம் பிடித்த பெண்ணுக்கு புலிட்சர் விருது அறிவிப்பு…

0

அமெரிக்க போலீசாரால் கறுப்பினத்தவர் ஜார்ஜ் பிளாயிட் கொல்லப்பட்ட சம்பவத்தை உலகிற்கே வீடியோ எடுத்து காட்டிய 18 வயது பெண்ணுக்கு புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரில் கடந்த ஆண்டு ஜார்ஜ் பிளாய்ட்எ ன்ற கறுப்பினத்தைச் சேர்ந்தவரை போலீஸார் சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கிப் பிடித்து டெர்ரக் சவுவின் என்ற போலீஸ்காரர், பிளாய்டை கீழே தள்ளி அவரது கழுத்தில் காலை வைத்து பலமாக அழுத்தினார். இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் இறந்தார்.

இதனால் அமெரிக்காவின் பல இடங்களில் போராட்டம் வெடித்தது. மேலும் பல்வேறு நாட்டு மக்கள் தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர். பின்னர் போலீஸ்காரர் டெர்ரக் சவுவின் உட்பட அவருடன் இருந்த 3 போலீஸ்காரர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் அந்த வீடியோவை பதிவு செய்த இளம்பெண் டார்னெல்லா ஃபிரேசியருக்கு உலகின் உயரிய கவுரவம் என கருதப்படும் புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here