தமிழக பட்ஜெட் 2023-24., இத்தனை திட்டங்கள் இடம் பெறுமா? அல்லது நிதி பற்றாக்குறையால் பாதிக்கப்படுமா?

0

தமிழகத்தில் 2023-24 ம் நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட்டை நாளை காலை 10 மணிக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய உள்ளார். இதில் பெரும்பாலானோர் எதிர்பார்த்து வரும் குடும்ப தலைவிகளுக்கான மாதம் ரூ.1,000 உதவித்தொகை திட்டம் பட்ஜெட்டில் வெளியாவது உறுதி.

ஆனால் கடந்த ஆட்சியில் காலி செய்யப்பட்ட கஜானாவால் நிதி பற்றாக்குறை நிலவி வருவதாக முதலமைச்சர் அண்மையில் தெரிவித்து இருந்தார். இதனால் கடந்த 2022-23ம் ஆண்டு பட்ஜெட் கூட முந்தைய ஆண்டை விட குறைவாகவே ரூ.52,781 கோடியாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்த நிதி பற்றாக்குறை தற்போதும் நிலவி வருவதால் குடும்ப தலைவிகளுக்கான திட்டத்தில் குறிப்பிட்ட ரேஷன் கார்டுதாரர்கள் மட்டுமே பயன் பெறும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் மாநிலத்தின் கடன் உள்ளிட்ட விபரங்களும் மின்னணு வடிவில் பட்ஜெட் தாக்கலில் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அரசு ஊழியர்களுக்கான பட்ஜெட்டில் பழைய ஓய்வூதிய திட்டம், ஊதிய உயர்வு உள்ளிட்ட நலத்திட்டங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து நாளை மறுநாள் வேளாண் துறை முன்னேற்றத்திற்கான பட்ஜெட்டை அமைச்சர் M.R.K.பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here