
லெஜண்ட்ஸ் லீக் தொடரில், இந்திய மஹாராஜாஸ் அணியை 85 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆசியா லென்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
லெஜண்ட்ஸ் லீக்:
கத்தார் தலைநகர் தோகாவில் கடந்த 10ம் தேதி முதல் 3 அணிகளுக்கு இடையே லெஜண்ட்ஸ் லீக் தொடரின் 3 வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், வேர்ல்ட் ஜெயண்ட்ஸ் அணியானது முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தது. இதையடுத்து, இறுதிப் போட்டிக்கு முன்னேறும் 2வது அணிக்கான போட்டியில், நேற்று இந்திய மஹாராஜாஸ் அணிக்கு எதிராக ஆசியா லென்ஸ் அணி மோதியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆசியா லென்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய, ஆசியா லென்ஸ் அணியில், உபுல் தரங்கா 50, திலகரத்ன டில்ஷான் 27, முகமது ஹபீஸ் 38, அஸ்கர் ஆப்கான் 34* என வீரர்கள் அனைவரும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால், ஆசியா லென்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்களை குவித்திருந்தது.
தமிழக பட்ஜெட் 2023-24., இத்தனை திட்டங்கள் இடம் பெறுமா? அல்லது நிதி பற்றாக்குறையால் பாதிக்கப்படுமா?
சற்று கடினமான இலக்கை துரத்திய கம்பீர் தலைமையிலான இந்திய மஹாராஜாஸ் அணி, ஆசியா லென்ஸ் வீரர்களின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினர். இதன் விளைவால், 16.4 ஓவரில் 106 ரன்கள் மட்டுமே எடுத்து, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த போட்டியில், 85 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆசியா லென்ஸ் இறுதிப் போட்டிக்கும் முன்னேறியது. இறுதிப் போட்டியில் ஆசியா லென்ஸ் அணி, வேர்ல்ட் ஜெயண்ட்ஸ் அணியை நாளை எதிர்கொள்ள இருக்கிறது.