இனி ஆம்பள வேணா.., ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணுங்க.., வனிதாவுக்கு அட்வைஸ் கொடுத்த மகள்!!

0

தென்னிந்திய சினிமாவில் 90 களில் வெளியான சில படங்களில் ஹீரோயினாக நடித்து வந்தவர் தான் வனிதா விஜயகுமார். இவர் சந்திரலேகா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் மத்தியில் நல்ல ரீச்சை பெற்று வந்தார். இதன் பின் பல வருடங்களுக்கு சினிமாவுக்கு கேப் விட்ட இவர் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இவரது அதிரடி பேச்சால் ரசிகர்கள் கவனத்தை பெற்று வந்தார்.

சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கிய ஏடிகே மோகன் பகான்…, ஒரு கோல் வித்தியாசத்தால் தலைகீழாக மாறிய ஆட்டம்!!

இதன் பிறகு குக் வித் கோமாளி ஷோவில் குக்காக களமிறங்கி முதல் பரிசை தட்டிச் சென்றார். இதுபோக கடந்த சில வருடங்களுக்கு முன் பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் அவரது திருமணம் பல்வேறு சர்ச்சைக்கு உள்ளாகி வந்த நிலையில், சில மாதங்களில் இருவரும் பிரிந்து விட்டனர்.இந்த நேரத்தில் இவரது மகளுடன் ஒரு தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதில் பேட்டியாளர் ஒருவர் உங்கள் குழந்தைகள் உங்களது திருமணம் வாழ்க்கைக்கு கொடுத்த அட்வைஸ் என்னவென்று கேட்டுள்ளார். அதற்கு வனிதா ”இந்த ஆண்கள் எல்லாம் வேஸ்ட் மம்மி, நீங்க இனி ஒரு லேடிய பார்த்து திருமணம் செய்து கொள்ளுங்கள் என சொல்வார்கள்” என்ற ஒரு சுவாரசியமான பதிலை கொடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இவரது இந்த சுவாரஸ்யமான பேட்டி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here