தமிழகத்தில் ஜூன் 7ம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு??

0

நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா இரண்டாம் அலையின் பலி எண்ணிக்கையால் மாநில அரசுகள் தற்போது ஊரடங்கு விதிகளை கடுமையாக்கி வருகின்றன. தற்போது தமிழகத்திலும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீடிப்பது அவசியம் என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை அளித்துள்ளனர் என்று மு க ஸ்டாலின் கூறினார்.

நீடிக்குமா ஊரடங்கு ??

தற்போது கொரோனா 2ம் அலையில் மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். நோய் பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இருப்பினும் கொரோனா பரவலில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. நோய் தொற்று மிக வேகமாக அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு கூடுதல் கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு நீடிப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது. எனவே மேலும் கடும் கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு தொடரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் தமிழக அரசு நிர்ணயித்திருந்த ஊரடங்கு காலம் வரும் திங்களுடன் முடிவடையுள்ளது. ஆனால் இப்பொழுது தொடரும் கொரோனா காலத்தில் இந்த ஊரடங்கு முடிவடையுமா என்று கேட்டால் அது கேள்விக்குறி தான். இதுகுறித்து தற்போது தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

தமிழகத்திலும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீடிப்பது அவசியம் என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை அளித்துள்ளனர் என்று மு க ஸ்டாலின் கூறினார். மேலும் அப்படி ஊரடங்கில் தளர்வுகள் இருந்தாலும் தனியார் நிறுவனங்கள், கோவில்கள், மற்றும் அழகு நிலையங்கள் யாவும் திறக்கப்பட வாய்ப்பில்லை என்று வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஆலோசனை முடிவில் அரசு என்ன முடிவை சொல்ல போகிறார்கள் என்று மக்கள் பதட்டத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here