டெல்லியின் குறைந்த வெப்பநிலை – 7ஆண்டுகளுக்குப் பின் மிகக் குறைவு!!!

0

டெல்லியில் 7 ஆண்டுக்குப் பிறகு மே மாதத்தில் மிகக் குறைந்த அளவில் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

டெல்லியின் குறைந்த வெப்பநிலை:

டெல்லியில்  சனிக்கிழமையன்று ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் மே மாதத்திற்கான வெப்பநிலை; மிகக் குறைந்த அளவு பதிவாகியுள்ளது. மேலும்  நள்ளிரவுக்குப் பிறகு நகரத்தில்  இடியுடன் கூடிய மழை பெய்தது. டவ் தே புயல் காரணமாக டெல்லி; உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் தொடர் மழை பெய்து வருகிறது. கடந்த 20ஆம் தேதியில்  தலைநகர் டெல்லியில் 119.3 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இந்த மழைப்பொழிவு, டெல்லியில் மே மாதங்களில் இதுவரை பதிவாகாத அளவில் அதிகபட்ச அளவு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதை தொடர்ந்து டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸாக குறைந்தது; இது இந்த ஆண்டின் இயல்பை வெப்பநிலையை  விட ஒன்பது டிகிரி குறைவாக உள்ளது; ஏனெனில் நகரத்தில் நள்ளிரவு முதல் அதிகாலை 5.30 மணி வரை 15.6 மிமீ மழை பெய்தது. மேலும் மே 13, 2014கு பின்னர்  இந்த மாதத்தில் தான் குறைந்தபட்ச வெப்பநிலை 18 டிகிரியாக குறைந்தது; என்று இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (ஐஎம்டி) தகவல்கள் தெரிவிக்கின்றன.

லோதி சாலையில் நள்ளிரவு முதல் அதிகாலை 5.30 மணி வரை குறைந்தபட்ச வெப்பநிலை 16.8 டிகிரி செல்சியஸ்; மற்றும் 19.5 மிமீ மழை பதிவாகியுள்ளது. மேலும் தெற்கு டெல்லியின் அயனகரில் அதிக அளவு மழை பெய்தது; அங்கு ஐஎம்டி ஆய்வகத்தில் 31.2 மிமீ மழையும்; குறைந்தபட்ச வெப்பநிலை 18.2 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது.

Instagram  => Follow செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here