தமிழக அரசு மாதிரி பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை – மார்ச் 4 ஆம் தேதி மதிப்பீட்டு தேர்வு!

0
தமிழக அரசு மாதிரி பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை - மார்ச் 4 ஆம் தேதி மதிப்பீட்டு தேர்வு!
தமிழக அரசு மாதிரி பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை - மார்ச் 4 ஆம் தேதி மதிப்பீட்டு தேர்வு!

தமிழகத்தில் உள்ள அரசு மாதிரி பள்ளிகளில் 2023-24 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் அடிப்படை மதிப்பீட்டு தேர்வு மார்ச் 4 ஆம் தேதி நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிப்பீட்டு தேர்வு

தமிழகத்தில் மதுரை, திருப்பத்தூர், சென்னை, ஈரோடு, இராமநாதபுரம், திருநெல்வேலி, நீலகிரி, திருவாரூர், சிவகங்கை, கோயம்புத்தூர், இராணிப்பேட்டை , வேலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 15 அரசு மாதிரி பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளது. அந்த பள்ளிகளில் 2023-24 கல்வியாண்டிற்கான 10 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை அடிப்படை மதிப்பீட்டு தேர்வு மூலமாக நடத்தப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாடு மாதிரி பள்ளி உறுப்பினர் செயலர் ஆர். சுதன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறார்.

மார்ச் 20 தமிழக பட்ஜெட் தாக்கல் குறித்த ஆலோசனை கூட்டம் – கருத்துக்கள் சேகரிப்பு!

அதில் அரசு மாதிரி பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் அடிப்படை மதிப்பீட்டு தேர்வு மார்ச் 4 ஆம் தேதி காலை 10.30 மணி முதல் 12 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வினை எழுத ஒவ்வொரு மாவட்டத்திலும் மொத்தம் 240 மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். இந்த தேர்வுக்கு தேவையான இடம் மற்றும் மற்ற ஏற்பாடுகளை முதன்மை கல்வி அதிகாரிகள் செய்ய வேண்டும் எனவும், அதன் பின் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேர்வு எழுத தகுதி பெற்ற மாணவர்களின் விவரங்களை அனுப்ப அறிவுறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த தேர்வினை எழுத மாணவர்களை அழைத்து வருவதும், மீண்டும் கூட்டி செல்ல பொறுப்பான ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். இந்த தேர்வானது ஓஎம்ஆர் தாளில் நடைபெறும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு மாதிரி பள்ளிகளில் மதிப்பீட்டு தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதற்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here