“ஆண்டின் சிறந்த வீரர்” விருதை வென்ற இளம் இந்தியர்…, ஆசிய செஸ் கூட்டமைப்பு கொடுத்த அங்கீகாரம்!!

0
"ஆண்டின் சிறந்த வீரர்" விருதை வென்ற இளம் இந்தியர்..., ஆசிய செஸ் கூட்டமைப்பு கொடுத்த அங்கீகாரம்!!

ஆசிய செஸ் கூட்டமைப்பு சார்பாக அபுதாபியில் நடந்த நிகழ்ச்சியில் ஆண்டின் சிறந்த வீரர் என்ற விருதை இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் டி குகேஷ் பெற்றுள்ளார்.

செஸ்:

இந்தியாவில், விளையாட்டு துறையில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வீரர்கள் பலவித சாதனைகளை படைத்தும், முறியடித்தும் வருகின்றன. உள்ளூரில் மட்டும் இல்லாமல், வெளிநாடுகளிலும் பல பதக்கங்களை வென்று சர்வதேச அளவிலான தரவரிசையில் இடம் பெற்று அசத்தி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்த வகையில், கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற 44வது செஸ் ஒலிம்பியாட்டில் 2700 புள்ளிகளுக்கு மேல் பெற்ற இந்தியாவின் இளம் வீரரான (16 வயது) குகேஷ் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார். இதன் மூலம், ஆசிய செஸ் கூட்டமைப்பானது(ACS) இந்திய கிராண்ட்மாஸ்டர் டி குகேஷுக்கு கடந்த ஆண்டுக்கான சிறந்த வீரர் என்ற விருதை வழங்கி கவுரவித்துள்ளது.

கேட்சுகளில் சாதனை படைத்த ஐபிஎல் நட்சத்திரங்கள்…, முதலிடத்தில் CSK அணியின் சின்ன தல!!

தனக்கு விருது வழங்கப்பட்டதை குகேஷ் தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ACSக்கு நன்றி தெரிவித்துள்ளார். இவர் தற்போது செஸ்ஸில் 2732 ரேட்டிங் புள்ளிகளை தக்க வைத்துக் கொண்டுள்ளார். இதன் மூலம் FIDE மதிப்பீட்டின்படி, சர்வதேச செஸ் வீரர்களுக்கான பட்டியலில் 56 வது இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள மிக இளம் வீரராக இந்தியாவின் குகேஷ் திகழ்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here