மார்ச் 20 தமிழக பட்ஜெட் தாக்கல் குறித்த ஆலோசனை கூட்டம் – கருத்துக்கள் சேகரிப்பு!

0
மார்ச் 20 தமிழக பட்ஜெட் தாக்கல் குறித்த ஆலோசனை கூட்டம் - கருத்துக்கள் சேகரிப்பு!
மார்ச் 20 தமிழக பட்ஜெட் தாக்கல் குறித்த ஆலோசனை கூட்டம் - கருத்துக்கள் சேகரிப்பு!

தமிழக அரசின் 2023-24 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் வருகிற மார்ச் 20 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில், இன்று (மார்ச் 2) நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

பட்ஜெட் ஆலோசனை

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மார்ச் மாதங்களில் தாக்கல் செய்யப்படும். அந்த வகையில் 2023-24 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு பட்ஜெட் வருகிற மார்ச் 20 ஆம் தேதி நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்வார் என சபாநாயர் அப்பாவு சமீபத்தில் தகவல் வெளியிட்டார். இந்நிலையில் வருகிற 9ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில் அதில் தமிழக நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்படும்.

பணி நீக்கங்களுக்கு மத்தியில் வேலை வாய்ப்பு வழங்கும் ஐடி நிறுவனங்கள் – வெளியான ஆய்வறிக்கை!

அந்த வகையில் இந்த ஆண்டு பட்ஜெட்டில் பெண்களுக்கு மாதம் ரூ. 1000 ஊக்கத்தொகை குறித்த அறிவிப்பு வெளியாகும் என ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதனால் மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கும் நிலையில், பட்ஜெட் குறித்த அறிக்கை தயார் செய்ய இன்று ( மார்ச் 2) தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் நிதிநிலை அறிக்கையில் இடம் பெறக்கூடிய அம்சங்கள், தொழில்துறையின் எதிர்பார்ப்புகள் குறித்த கருத்துக்கள் கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது, அது மட்டுமில்லாமல் இந்த கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு, தா. மோ. அன்பரசன், தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பங்கேற்று இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here