
இதுவரை 15 சீசன்களை கடந்துள்ள ஐபிஎல் சீசனில், 2 சாதனைகளை எந்த ஒரு வீரராலும் எளிதில் எட்ட முடியாத அளவுக்கு தோனி படைத்துள்ளார்.
ஐபிஎல்:
இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் (ஐபிஎல்) 16 வது சீசன் மார்ச் 30ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த முறை, ஐபிஎல் லீக் போட்டிகள் அனைத்தும் இந்தியாவிலேயே நடைபெற உள்ளது என்பதால், ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டுள்ளனர். மேலும், 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியானது 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றே, தோனிக்கு ஓய்வு தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற தோனி, நடப்பு வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருடன் தனது ஓய்வினை அறிவிப்பார் என பரவலான தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில், ஐபிஎல் வரலாற்றில் எவரும் எட்ட இயலாத, இரண்டு சாதனைகளை இவர் படைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, CSK அணி விளையாடி உள்ள போட்டிகளில், இவர் கேப்டனாக 210 போட்டிகளில் விளையாடி முதலிடத்தில் உள்ளார்.
“ஆண்டின் சிறந்த வீரர்” விருதை வென்ற இளம் இந்தியர்…, ஆசிய செஸ் கூட்டமைப்பு கொடுத்த அங்கீகாரம்!!
இந்த பட்டியலில், கேப்டனாக ரோஹித் சர்மா 143, விராட் கோலி 140 என அடுத்த இடத்தில் உள்ளனர். மேலும், 20 வது ஓவரில் மட்டும் அதிக (52) சிக்ஸர்களை அடித்த வீரராக தோனி முதலிடத்தில் உள்ளார். இதில், கெய்ரோன் பொல்லார்ட் 33 மற்றும் ஜடேஜா 26 சிக்ஸர்கள் அடித்து அடுத்த இரு இடங்களில் உள்ளனர். எதிர்வரும் ஐபிஎல் சீசனில், தோனி சிக்ஸர் சாதனையை கூட ஜடேஜா முயற்சிக்கலாம். ஆனால், ஐபிஎல்லில் கேப்டனாக தோனி படைத்த சாதனையை இனி வரும் வீரர்கள் முறியடிப்பது என்பது அவ்வளவு எளிதானது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.