ஒரே நாளில் 2 மில்லியன் வியூஸ் – தெறிக்கவிட்ட “சுல்தான்” பட ட்ரைலர்!!

0

நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகவுள்ள “சுல்தான்” திரைப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது. இதனை அடுத்து அந்த ட்ரைலரை 2 கோடிக்கும் அதிகமானோர் ஒரே நாளில் பார்த்துள்ளனர். இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி வெளி வர உள்ளது.

சுல்தான் திரைப்படம்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான கார்த்தி தற்போது “சுல்தான்” என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துளளார். இந்த திரைப்படம் ‘ட்ரீம் வாரியர்’ நிறுவனத்தால் தயாரிக்கபட்டு விவேக் – மெர்வின் இருவரின் இசையில் வெளிவர உள்ளது. இந்த படத்தினை “ரெமோ” திரைப்படத்தினை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ளார்.

முடி உதிர்வு பிரச்சனைக்கு இந்த 2 பொருள் போதும் – இதோ உங்களுக்காக!!

இவர் கடந்த 2016 ஆம் ஆண்டிற்கு பிறகு தற்போது தான் இந்த படத்தினை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் முதன் முறையாக தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இப்படியாக இருக்க இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறி உள்ளது என்று கூட சொல்லலாம். இதனை அடுத்து இந்த திரைப்படத்தின் ட்ரைலர் நேற்று மாலை 5 மணிக்கு வெளியானது.

ட்ரைலர் மிகவும் மிரட்டலாக இருப்பதாக அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே போல் கார்த்தி மற்றும் ராஷ்மிகா இருவருக்குமான காதல் காட்சிகள் வித்தியாசமானதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், பெரிய டானாக காட்டப்படும் நடிகர் கார்த்தி அவரிடத்தில் மட்டும் பணிவாக நடந்துகொள்கிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதே போல் இந்த திரைப்படத்தில் ஆக்ஷனுக்கு குறை இருக்காது என்றும் நன்றாகவே தெரிவிக்கிறது. இந்த ட்ரைலர் வந்து முழுசாக இன்னும் 24 மணி நேரம் கூட ஆகாத நிலையில் 2.4 கோடி பேர் பார்த்துள்ளனர். தங்களது கருத்துக்களையும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here