நடிகர் விவேக் மரணத்திற்கு கண்டிப்பாக இது காரணமில்லை – விசாரணையில் உறுதியான தகவல்!!

0

தமிழ் திரை உலகில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக விளங்கிய விவேக்கின் மரணத்திற்கும் கொரோனா தடுப்பூசிக்கு எந்தவித தொடர்பும் இல்லை என தேசிய தடுப்பூசி ஆய்வுக்குழு விளக்கமளித்துள்ளது.

இறப்பின் காரணம் வெளியீடு:

தமிழ் திரை உலகத்தில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விவேக். தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள இவர் கடந்த கொரோனா இரண்டாம் அலையின் போது காலமானார்.  கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட இரண்டு நாட்களில் அவர் காலமானதால், தடுப்பூசியின் பக்க விளைவுகளால் தான் இவர் இறந்தார் என்ற வதந்தி கிளம்பியது.

இதையடுத்து,  இது குறித்த புகார் மனு ஒன்றை விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன்  தேசிய மனித உரிமை ஆணையத்தில்  அளித்தார்.  இந்த மனுவை விசாரித்த ஆணையத்திடம், தேசிய தடுப்பூசி ஆய்வுக் குழு முக்கிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. அதாவது, நடிகர் விவேக் மரணத்திற்கு தடுப்பூசி காரணம் இல்லை என்றும், மாரடைப்பால் தான் அவர் இறந்தார் என்றும் தற்போது தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here