தளபதி66 படத்தின் கதை இதுதான் – இயக்குனர் வெளியிட்ட மாஸ் அப்டேட்!!

0

தளபதி விஜய்யின் 66 வது படத்தின் திரைக்கதை பற்றிய முக்கிய அப்டேட்டை இந்த படத்தின் தெலுங்கு இயக்குனர் வம்சி வெளியிட்டுள்ளார்.

விஜய் படத்தின் கதை:

தமிழ் திரை உலகத்தில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தை பெற்றிருப்பவர் நடிகர் விஜய்.  தற்போது, இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.  விரைவில் இந்த படம் வருகிற பொங்கலுக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த நிலையில், விஜய்யின் 66வது படம் பற்றிய அறிவிப்பு அண்மையில் வெளி வந்தது.

இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குகிறார்.  தில் ராஜு தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை பற்றி எந்த அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை. தற்போது, இந்த படத்தின் அப்டேட் பற்றி முக்கிய அறிவிப்பு ஒன்றை அதன் இயக்குனர் வெளியிட்டுள்ளார். அதாவது, இந்த படம் அரசியல் சார்ந்த படம் இல்லை என்றும், இது ஒரு செண்டிமெண்டல் படமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.  விரைவில், இது பற்றிய அறிவிப்பு டிசம்பர் மாதத்தில் இருந்து வெளிவரும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here