பெண் கல்விக்கு ஆதரவாக திரும்பும் தாலிபான் அரசு? வெளியுறவுத்துறை அமைச்சர் பகீர்!!!

0

உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில் பெண் சமூகத்தினரின் பங்கீட்டால் அபரிமிதமான வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. இந்த சூழலில் ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி பொறுப்பேற்ற தலிபான் அரசு, கல்வி, உரிமை ஆகியவற்றில் பெண்களுக்கு எதிரான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதனால் பெண்கள் மட்டுமல்லாமல் கல்லூரி மாணவர்கள் உட்பட பல ஆண்களும் போராட்டங்களை அவ்வப்போது நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக தாலிபான் அரசின் வெளியுறவு இணை அமைச்சர் கூறுகையில், “கல்வி இயற்கையும், இறைவனும் கொடுத்தது. அது அனைவரின் உரிமையாகும். பெண் குழந்தைகளின் கல்விக்கு தடை விதித்ததால் தான், மக்கள் நம்மிடம் இருந்து விலகி இருக்கிறார்கள். எனவே அனைவருக்கும் கல்வி கதவை திறக்க வேண்டும்” என கூறியுள்ளார். இந்த பேச்சு பலர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

அரசு ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு தான்…, உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here