Sunday, May 5, 2024

maharastra tournament

தேசிய அளவில் கும்பகோணம் பள்ளிக்கு முதலிடம்

மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ராணுவ பயிற்சி பள்ளியில் நடைபெற்ற 6-வது  ஊரக விளையாட்டு போட்டியில் ஹரியானா, மகாராஷ்டிரா, தெலுங்கானா, தமிழ்நாடு  மற்றும் பல  மாநிலங்களைச் சேர்ந்த பள்ளிகள் கலந்து கொண்டன. இதில் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான கபடி போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த கும்பகோணம் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்றனர். வெற்றி பெற்ற அணியைச் சேர்ந்த மாணவிகளின் விபரம் பின்வருமாறு: கும்போகோணம் மேல்நிலைப்பள்ளி மாணவிகள்:      காஞ்சனா, தரணி, ஆர்த்தி தேவனாஞ்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவிகள்:       ப்ரீத்தா, கிரிஜாதேவி, ஜெயஸ்ரீ கும்பகோணம் தூயவளனார் மேல்நிலைப் பள்ளி மாணவி:      ஜீவா திருப்புறம்பியம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி:      ஆஷா திருப்பனந்தாள் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி:      சுகாசினி ஆகிய வீராங்கனைகளை உள்ளடக்கிய தமிழக அணி தங்கப் பதக்கத்தை கைப்பற்றி நம் மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. தமிழ்நாடு தடகள சங்கத்தின் மாநில துணைத் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான சாக்கோட்டை க. அன்பழகன் அவர்கள் வெற்றி பெற்று வீடு திரும்பிய மாணவிகள் மற்றும் அவர்களின் பயிற்சியாளர்கள் ஆகிய யு.அசோக், எஸ்.சூர்யா, வி.சுந்தர் ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்தார்.
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img