Sunday, May 19, 2024

dmdk victory

பீனிக்ஸ் பறவையாக உயிர்த்தெழுந்தது – தேமுதிக

தமிழக அரசியல் களத்தில் காணாமல் போய்விட்டதாக கருதப்பட்ட தேமுதிக தற்போது நடந்த உள்ளாட்சித் தேர்தலில் தமது செல்வாக்கை நிரூபித்திள்ளது.  மொத்தம் 82 இடங்களில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவியை கைப்பற்றி தனது இருப்பை பதிவு செய்தது. ஆரம்ப காலத்தில் கூட்டணி அமைத்து விஸ்வரூப வெற்றி பெற்று எதிர்கட்சியாக இருந்த தேமுதிக பின்னர் ஏற்பட்ட குழப்பங்கள் காரணமாக பெரும் பின்னடைவை சந்தித்தது.  அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டதும் ஒரு காரணமாக கூறப்பட்டது. இதனால் தமிழக தேர்தல் களத்தில் தேமுதிக காணாமல் போய்விட்டதாகவே கருதப்பட்டது. ஆனால் தற்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டு எண்ணிக்கை பல இடங்களில் முடிவடைந்துள்ளளது.  தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அதிகார அறிவிப்பின் படி தேமுதிக மொத்தம் 82 இடங்களில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல்களில் 330 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களை தேமுதிக பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது திமுக, அதிமுகவை தொடர்ந்து காங்கிரஸ் 88 இடங்களைப் பெற்ற நிலையில் தேமுதிக 4-வது இடத்தை பெற்றிருக்கிறது. மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் 2 இடங்களில் தேமுதிக வென்றுள்ளது. 
- Advertisement -spot_img

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -spot_img