இந்தியா தோற்றதற்கு ஐபிஎல் தான் காரணமா?? முன்னாள் வீரர்கள் கடும் குற்றச்சாட்டு!!

0
இந்தியா தோற்றதற்கு ஐபிஎல் தான் காரணமா?? முன்னாள் வீரர்கள் கடும் குற்றச்சாட்டு!!
இந்தியா தோற்றதற்கு ஐபிஎல் தான் காரணமா?? முன்னாள் வீரர்கள் கடும் குற்றச்சாட்டு!!

இந்திய அணி டி20 உலக கோப்பை அரையிறுதி போட்டியில் தோல்வியை தழுவியதற்கு ஐபிஎல் தான் முக்கிய காரணம் என பல முன்னாள் வீரர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்திய அணி:

டி20 உலக கோப்பை தொடருக்கான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி அடைந்த மோசமான தோல்வி குறித்து பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த விமர்சனங்களில் பல, இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் லீக்கை மையமாக கொண்டு எழுந்து வருகின்றன.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த வகையில், பாகிஸ்தான் முன்னாள் வீரரான வாசிம் அக்ரம், இந்தியா 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை வென்ற பிறகு, அடுத்த ஆண்டே ஐபிஎல் லீக் தொடங்கியது. இந்த ஐபிஎல் லீக் தொடரானது, பல இளம் வீரர்களை கண்டுபிடிக்க உதவியதை தவிர, அணியில் எந்த ஒரு பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்று வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.

ரோஹித் கேப்டன்சியில் இந்தியா ஒரு கோப்பையும் வெல்லவில்லை…, அப்போ விராட் கோஹ்லியின் நிலை தானா??

இதனை தொடர்ந்து, இந்த ஐபிஎல் லீக் தொடக்கத்திலிருந்தே இந்தியா டி20 உலக கோப்பையை வெல்லவில்லை என்று சுட்டிக்காட்டி உள்ளார். மேலும், ஐபிஎல் லீக் தொடருக்கான ஏலத்தில் குறைந்த பணத்தை செலவிடும் மாறும் பிசிசிஐக்கு அறிவுறுத்தி உள்ளார். இவரை போல, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா, பில்லியன் டாலர்களை கொண்ட லீக் தொடரில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களை விட, பாகிஸ்தான் வீரர்கள் சிறந்தவர்கள் என்று ஐபிஎல் லீக்கை சாட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here