ரோஹித் கேப்டன்சியில் இந்தியா ஒரு கோப்பையும் வெல்லவில்லை…, அப்போ விராட் கோஹ்லியின் நிலை தானா??

0
ரோஹித் கேப்டன்சியில் இந்தியா ஒரு கோப்பையும் வெல்லவில்லை..., அப்போ விராட் கோஹ்லியின் நிலை தானா??
ரோஹித் கேப்டன்சியில் இந்தியா ஒரு கோப்பையும் வெல்லவில்லை..., அப்போ விராட் கோஹ்லியின் நிலை தானா??ரோஹித் கேப்டன்சியில் இந்தியா ஒரு கோப்பையும் வெல்லவில்லை..., அப்போ விராட் கோஹ்லியின் நிலை தானா??

ரோஹித் தலைமையின் கீழ் இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்ல தவறியதால், விராட் கோஹ்லியின் நிலை தான் இவருக்கும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.

புது கேப்டன்:

இந்திய அணி நடப்பு ஆண்டு டி20 உலக கோப்பை தொடரை இங்கிலாந்துக்கு எதிராக முடித்துக் கொண்டது. இந்த உலக கோப்பையை தொடர்ந்து இந்திய அணி அடுத்த வருடம் நடைபெற உள்ள ஒருநாள் மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களில் அதிக கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்பே விராட் கோஹ்லியின் ஓய்வு குறித்து பல்வேறு விமர்சனங்கள் வந்த வண்ணம் இருந்தன.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில், இந்திய அணியில் உள்ள தினேஷ் கார்த்திக், அஸ்வின், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோஹ்லி உள்ளிட்ட மூத்த வீரர்கள் அடுத்த டி20 உலகக் கோப்பைக்கான அணியில் இருப்பார்கள் என்பது கேள்வி குறியாகி உள்ளது. இதில், விராட் தலைமையின் கீழ் இந்திய அணி ஒரு கோப்பையும் வெல்லவில்லை என்ற காரணத்தால் தான் கேப்டன்சி பதவியிலிருந்து விலகினார் என முன்பு தகவல் வெளியாகி இருந்தன.

தோனி தலைமைக்கு பிறகு உலக கோப்பை கனவு அவ்வளவுதானா?? விராட் கோஹ்லி அதிரடியாக விளையாடியும் ரசிகர்கள் ஏமாற்றம்!!

இது போல, ரோஹித் சர்மா தலைமையின் கீழ் இந்தியா, மற்ற அணிகளுக்கு இடையிலான பல தொடர்களை கைப்பற்றி இருந்தாலும், பெரிய அளவிலான ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பையை வெல்ல தவறியது. இதனால், விரைவில் இந்திய அணியின் தலைமையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஹர்திக் பாண்டியா தான் அடுத்த கேப்டன் என்ற தகவல்களும் பரவி வருகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here