கொரோனாவை அழிக்கும் சீனாவின் சினோபார்ம் தடுப்பூசி – சுகாதாரத்துறை ஒப்புதல்!!

0

சீனாவில் இருந்து பரவி உலகம் முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கும் கொரோனா நோய்கான சினோபார்ம் தடுப்பூசியை சீனா கண்டுபிடித்துள்ளது. இந்த தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

சீனாவின் சினோபார்ம் தடுப்பூசி:

2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முறையாக சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத்தொடங்கிய கொரோனா தற்போது உலகம் முழுவதும் உள்ள அனைத்து நாடுகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 15.75 கோடி பேருக்கு மேல் நோயால் பாதிக்கப்பட்டும் பல லட்சம் மக்கள் கொரோனா தொற்றால் இறந்தும் உள்ளனர். எனவே கொரோனா பரவலை தடுக்கும் பணியில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல முயற்சிகளை மேற்கொள்ளும் நிலையில் உலக ஆராய்ச்சியாளர்களும் போராடி தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்து கொண்டுள்ளனர்.

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி, அமெரிக்காவின் மாடர்னா, இந்தியாவின் கோவாக்சின், கோவிஷீல்டு என பல தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில் தற்போது சீனா சினோபார்ம் தடுப்பூசியினை கண்டுபிடித்துள்ளது. சினோபார்ம் தடுப்பூசியில் 79 சதவீதம் செயல் திறன் கொண்டுள்ளது. மேலும் இது 3 முதல் 4 வாரங்கள் இடைவெளியில் செலுத்தப்பட வேண்டும் எனவும் கூறுகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்ததனால் ஏற்கனவே இந்த சினோபார்ம் தடுப்பூசியை பயன்படுத்தும் 22 நாடுகளை தவிர மற்ற நாடுகளும் பயன்படுத்த அனுமதி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழகத்தில் ஊரடங்கு காலத்திலும் தடுப்பூசி போடப்படும் என தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here