கொரோனவிற்காக சி.டி.ஸ்கேன் எப்போது மேற்கொள்ளலாம்? மருத்துவர்கள் கருத்து!!

0

கொரோனா காரணமாக பாதிக்கப்படும் நோயாளிகள் நுரையிரல் பாதிப்பால் அவதிப்பட்டு வருகின்றனர். இது எந்த காரணத்தால் ஏற்படுகிறது, அதே போல் இதற்கு எப்போது சி.டி.ஸ்கேன் மேற்கொள்ளலாம் என்று டெல்லியை சேர்ந்த மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார்.

கொரோனா பாதிப்பு

இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கின்றது. அந்த வகையில் இந்த நோய் தாக்கத்தினால் பாதிக்கப்படுபவர்கள் நுரையிரல் பாதிப்பாலும் அவதிப்படுவர். ஒருவர் கொரோனா தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டால், நுரையிரல் பாதிப்பின் ஆரம்ப கட்ட அறிகுறிகளாக இருமல், மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் இருமல் வரும் போது ரத்தம் வருதல் ஆகியவை இருக்கும். இயற்கையாகவே அனைவருக்கும் நோய் எதிர்ப்பு திறன் இருக்கும்.

கொரோனாவை அழிக்கும் சீனாவின் சினோபார்ம் தடுப்பூசி – சுகாதாரத்துறை ஒப்புதல்!!

அந்த நோய் எதிர்ப்பு திறன் தான் ஒருவரின் நுரையிரல் பாதிக்கப்படாமல் காக்கும். அந்த ஸ்கேன் முடிவுகளில் ஸ்கோரிங் என்ற ஒரு பகுதி இருக்கும். அதில் CO-RADS என்ற ஒன்று குறிப்பிடப்பட்டிருக்கும். அதில் 1 என்று இருந்தால், கொரோனா தாக்கம் நுரையிரலில் இல்லை என்று அர்த்தம். அதுவே 2 என்று இருந்தால், கொரோனா அல்லாமல் வேறு எந்தவொரு நோய் வைரஸ் உடலை பாதித்துள்ளது என்று அர்த்தம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

3 என்று குறிப்பிடப்பட்டிருந்தால், கொரோனா பாதிப்பு உடலில் இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று அர்த்தம். 4 என்று பதிவு செய்யப்பட்டிருந்தால், கொரோனாவிற்கான சாத்திய கூறுகள் இருக்கின்றது என்று பொருள் கொள்ள வேண்டும். 5 என்று இருந்தால், கண்டிப்பாக கொரோனா பாதிப்பு நுரையிரலையும் தாக்கியுள்ளது என்று அர்த்தம். இவை இப்படியாக இருந்தாலும், சி.டி.ஸ்கேன் மூலமாக கொரோனா பாதிப்பு இருப்பது தோராயமாக தான் தெரியுமே தவிர, உறுதிபட அதனை கூற முடியாது. மருத்துவரின் ஆலோசனையை பெற்ற பிறகு தான் சி.டி.ஸ்கேன் மேற்கொள்ள வேண்டும். கொரோனா அறிகுறிகள் இருக்கிறது என்று தென்பட்டால், மக்கள் இது போன்றவற்றை பார்த்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here