சர்வதேச அளவில் 6 விருதுகளை வாங்கி குவித்த சூரரை போற்று – நடிகர் சூர்யாவுக்கு கிடைத்த புதிய பெருமை!!

0
தனது 41 வது படத்தை தலை முழுகிய சூர்யா?? பாலாவை கழட்டி விட்டு முக்கிய இயக்குனருடன் கூட்டணி!!

நடிகர் சூர்யா நடிப்பில், உருவாகி கடந்த 2020ம் ஆண்டு வெளியான, சூரரைப் போற்று திரைப்படம் ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் ஆறு விருதுகளை வாங்கிக் குவித்துள்ளது.

விருது பெற்ற திரைப்படம்:

நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி கடந்த 2020ம் ஆண்டு தீபாவளி அன்று அமேசான் பிரைம் தளத்தில் வெளியான திரைப்படம் சூரரைப் போற்று. இந்த படம், வெளியான நாள் முதல், தற்போது வரை ரசிகர்களின் ஃபேவரைட் படமாக விளங்கி வருகிறது. தொடர்ந்து இந்த திரைப்படம், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.

தற்போது இந்த படம் ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த தயாரிப்பு நிறுவனம், சிறந்த கலை இயக்குனர் மற்றும் சிறந்த தமிழ் திரைப்படம் உள்ளிட்ட பிரிவுகளில் ஆறு திரைப்பட விருதுகளை பெற்று சர்வதேச அளவில் சாதனை படைத்துள்ளது. இதையடுத்து, ரசிகர்கள் பலரும் சூரரைப்போற்று படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here