
தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் சூர்யா. தற்போது இவர் நடிப்பில் கங்குவா திரைப்படம் உருவாகி வருகிறது.மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். மேலும் இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
Enewz Tamil WhatsApp Channel
மேலும் இந்த திரைப்படம் பத்து மொழிகளில் வெளியாக இருப்பதாக படக்குழு முன்பே அறிவித்திருந்தது. இந்நிலையில் இப்படத்தை குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் சூர்யா நடிக்கும் கங்குவா திரைப்படம் உலகளவில் 38 மொழிகளில் வெளியாகும். மேலும், ஐமேக்ஸ், 3டி முறையிலும் இப்படத்தை உலகமெங்கும் வெளியிட முடிவு செய்திருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.
ரோகிணிக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு.., உண்மையை உடைத்த PA.., அதிர்ச்சியில் உறைந்த விஜயா!!!