பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக களமிறங்கிய ‘சர்வைவர்’ – ஜீ தமிழ் வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு!!

0

ஜீ தமிழில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியை போலவே புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பவுள்ள நிலையில் அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

சர்வைவர்

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிப்பரப்பாகி வந்த நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் 100 நாட்கள் ஒரே வீட்டில் தங்கி எப்படி கடைசி சுற்று வரை முன்னேறுகிறார்கள் என்பது தான் கான்செப்ட். இந்த நிகழ்ச்சிக்கு அதிக வரவேற்பு கிடைத்தது.

இதனால் விஜய் டிவிக்கு டிஆர்பி ரேட்டிங் டாப்பில் எகிறியது. இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி போன்றே வெளிநாட்டில் சர்வைவர் என்ற நிகழ்ச்சி பிரபலமாகி வந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு வீட்டில் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த சர்வைவர் நிகழ்ச்சி ஆளில்லா தீவில் தான் எடுக்கப்படும்.

100 நாட்கள் அங்கு தங்கி யார் கடைசி வரை அங்கு இருக்கிறார்களோ அவர்கள் தான் வெற்றி பெறுவர்களாம். இந்நிலையில் இந்த நிகழ்ச்சி ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ளது. தமிழில் மட்டுமல்ல பல மொழிகளில் இந்த சர்வைவர் ஒளிபரப்பாகவுள்ளதாம்.

மேலும் ஜீ தமிழ் இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதாவது கூடிய விரைவில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளதை அறிவித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here