கடன், வட்டி செலுத்துவதில் சலுகை?? –  மக்கள் எதிர்பார்ப்பு!!!

0

கொரோனா தொற்று பாதிப்பு குறையும் வரை கடனுக்கான வட்டி செலுத்துவது மற்றும் கடனை திருப்பிச் செலுத்துவது ஆகியவற்றில் சலுகை அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட பொதுநலன் மனுவை உச்ச நீதிமன்றம் வரும் 24 ஆம் தேதி விசாரிக்கவுள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த பொதுநலன் மனுவை வழக்கறிஞர் விஷார் திவாரி தாக்கல் செய்துள்ளார்.  இந்த மனுவில், தற்போது ஊரடங்கு பல்வேறு மாநிலங்களில் போடப்பட்டுள்ளதால், மக்களுக்கு பொருளாதார நெருக்கடி , மன அழுத்தம், மருத்துவ தேவை போன்ற பல்வேறு சிரமங்களில் உள்ளனர். எனவே ஆறு மாத காலம் வரை கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு  அவகாசம் அளிக்க வேண்டும் அல்லது நோய்த்தொற்று பரவல் முடியும் வரை சலுகை அளிக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் கடன் அல்லது வட்டியை செலுத்த முடியாத மக்களின் வங்கிக்கணக்கை இந்தக் காலகட்டத்தில் வாராக் கடன் பட்டியலிலும் சேர்க்கக்கூடாது. இதுபோக எந்தவொரு நிதி நிறுவனமும் கடன் செலுத்தாத மக்களின் சொத்துக்களை ஏலம் விடக்கூடாது. நம்நாட்டு மக்கள் சுயமரியாதையுடனும், எந்தவிதமான மனஅழுத்தமும் இன்றி வாழ வேண்டும். இவ்வாறு அவர் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மே 24 ஆம் தேதி இம்மனுவை   எம்ஆர். ஷா, அசோக் பூஷாந் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற விடுமுறைக் கால நீதிபதிகள் அமர்வு விசாரிக்கவுள்ளது.இந்த கொரோனா ஊரடங்கில் அனைத்து மக்களும் கடுமையான நிதிச்சுமையை சந்தித்திருக்கும் வேலையில், உச்சநீதிமன்றம், இம்மனுவை விசாரித்து மக்களுக்கு சாதகமான உத்தரவு பிறப்பிக்கும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here