“என்னடா இது Air Indiaக்கு வந்த சோதனை” – தகவல்களை திருடிட்டாங்க!!!

0

ஏர் இந்தியா நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் விபரங்கள் இணையத்தில் திருடப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

என்னடா இது Air Indiaக்கு வந்த சோதனை:

ஏர் இந்தியா நிறுவன இணையதளத்தில் சைபர் தாக்குதல் நடைப்பெற்றதால்; 45 லட்சம் பயணிகளின் கிரெடிட் கார்டு மற்றும் பல தகவல்கள் திருடப்பட்டுள்ளது. ஏர் இந்தியா விமான நிறுவன எஸ்ஐடிஏ- இணையதள சர்வர் மீது; கடந்த பிப்ரவரி மாதம் மர்ம நபர்களால் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் கடந்த 11.08.2011 முதல் 02.02.2021 தேதி வரையிலான உலக அளவிலான பயணிகளின் தனிப்பட்ட விவரங்கள் அனைத்தும் வெளியானது என்று ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து பயணிகளின் பெயர், பிறந்த தேதி, முகவரி, பாஸ்வோர்ட் விவரம், டிக்கெட் விவரம், கிரெடிட் கார்டு விவரங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் வெளியாயிருக்கலாம் என்று ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இது ஏர் இந்தியா நிறுவனம் மட்டுமல்லாமல் மலேசிய ஏர் லைன், சிங்கப்பூர் ஏர் லைன் என பல நிறுவனத்தின் விவரங்கள் அனைத்தும் திருடப்பட்டுள்ளன.

எஸ்ஏடிஏ சர்வர் ஸ்விட்சர்லாந்தில் உள்ள ஜெனிவாவில் மையமாக வைத்து செயல்படுகிறது. இந்த சைபர் தாக்குதல் குறித்து விசாரணையும், தொடர் ஆய்வுகளும் நடந்து வருகின்றன, மேலும் சர்வர்களின் பாதுகாப்பு கூடுதலாகப் பலப்படுத்தப்பட்டுள்ளது.

Instagram  => Follow செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here