‘கவர்ச்சி புயல்’ சன்னி லியோன் பிறந்தநாள் – ரசிகர்கள் வாழ்த்து மழை..!

0

பாலிவுட் திரையுலகில் கவர்ச்சி கன்னியாக வலம் வரும் சன்னி லியோன் தனது 39வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதனால் அவரது ரசிகர்கள் விதவிதமாக ஹேஷ்டேக்களை உருவாக்கி இணையத்தில் வாழ்த்து மழையை பொலிந்து வருகின்றனர்.

ஆரம்ப வாழ்க்கை:

கனடாவில் பிறந்த சன்னி லியோன் ஆரம்பத்தில் ஆபாசப் படங்களில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமடைந்தார். பின்பு அவருடன் நடித்த டேனியல் வெப்பர் என்பவரையே திருமணம் செய்து கொண்டார். 2011ம் ஆண்டு சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பாலிவுட்டில் தடம் பதித்தார் சன்னி லியோன். அதன் பிறகு பாலிவுட் திரைப்படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்து அனைத்தும் வெற்றி பெற்றதால் புது உச்சத்திற்கு சென்றார்.

குடும்ப வாழ்க்கை:

2017ம் ஆண்டு லத்தூர் மாவட்டத்தில் நிஷா எனும் குழந்தையை தத்தெடுத்து வளர்க்க தொடங்கினார். பின்பு 2018ம் ஆண்டு வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்று 3 குழந்தைகளுக்கு தாயானார் சன்னி லியோன். தமிழிலும் இவர் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார். இவர் நடிக்கவிருந்த வீரமாதேவி எனும் திரைப்படம் தொடங்கி தற்போது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இவரின் பிறந்தநாளை ஒட்டி ரசிகர்கள் #HappyBirthdaySunnyLeone எனும் ஹேஷ்டேக்கை ட்ரெண்டிங் செய்து வருகின்றனர். அதற்கு இவர் நன்றி தெரிவிக்கும் வகையில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டு உள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here