‘ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு வலியுறுத்தும் மோடி – கருத்து தெரிவித்த சுனில் ஆராரோ!!

0

நாடு முழுவதும் ஒரே தேர்தல் முறைக்கு ஆணையம் தயார் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அராரோ தெரிவித்துள்ளார்.

ஒரே நாடு ஒரே தேர்தல்

கடந்த நவம்பர் மாதம், தேர்தல் அதிகாரிகளின் மத்தியில் காணொளி காட்சி வாயிலாக உரையாடிய பிரதமர். மோடி “நாடு முழுவதும் ஒரே தேர்தல் முறையை கொண்டு வரவேண்டுமென வலியுறுத்தியிருந்தார்.மேலும் அவர், அடிக்கடி தேர்தல் நடத்துவது, நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும் எனவும், ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே வாக்காளர் பட்டியல் தான் இப்போதைய தேவை எனவும், இது குறித்து ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும், தேர்தல் என்பது வெறும் விவாதப்பொருள் அல்ல எனவும் குறிப்பிட்டிருந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த சுனில் அராரோ “ஒரே நாடு ,ஒரே தேர்தல் திட்டத்திற்கு தேர்தல் ஆணையம் தயார்” எனக்கூறியுள்ளார். மேலும் அவர் தற்போதைய தேர்தல் சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொண்டால், ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை செயல் படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கடந்த 2015 மற்றும், 2018ம் ஆண்டுகளில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற இந்த திட்டம் பாரதிய ஜனதாவால் முன்வைக்கப்பட்டது. அப்போது காங்கிரஸ் உள்ளிட்ட அதனை வன்மையாக தொடர்ந்து கண்டித்து வருகின்றன. இது வீண் வேலையெனவும், நாட்டை அதிபர் ஆட்சிக்கு நகர்த்தும் செயல் எனவும் கூறி எதிர்த்து வரும் நிலையில் , தலைமை தேர்தல் ஆணையரின் இந்த அறிவிப்பு தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here