ஆன் ஸ்கிரீன்ல வீர வசனம்..ஆப் ஸ்கிரீன்ல காதல் வசனம் – சுந்தரியின் செய்கையால் மெர்சலாகிப் போன ரசிகர்கள்!!

0

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும், சுந்தரி சீரியலில் நாயகியாக நடித்து வரும் கேப்ரியல்லா தனது இன்ஸ்டா பக்கத்தில் செய்த ஆப் ஸ்கிரீன் அட்டகாசம், ரசிகர்களை மகிழ்வடைய செய்துள்ளது.

 ஆப் ஸ்கிரீன் அட்டகாசம் :

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில், தற்போது டிஆர்பியை எகிற வைக்கும் சீரியல் சுந்தரி. இந்தத் தொடரில், சுந்தரி என்ற கிராமத்து பெண்ணாக நடிப்பவர் நடிகை கேப்ரியெல்லா. இவருடைய கணவர் கார்த்தி, அனு என்ற பெண்ணை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டதால், அவர் மீது கோபப்பட்டு, சண்டை போட்டு பிரிந்து உள்ளார்.

மீண்டும் ஐஏஎஸ் ஆக போராடி படித்து வருகிறார். சமூக வலைதளங்களில், மிகவும் ஆக்டிவாக நபராக வலம் வருபவர் நடிகை கேப்ரியல்லா. இவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில், காதல் பாடல் ஒன்றுக்கு ரீல்ஸ் செய்து அதை பகிர்ந்துள்ளார். தற்போது இது, சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த  ரசிகர்கள் ஆன் ஸ்கிரீன்ல வீர வசனம்..ஆப் ஸ்கிரீன்ல காதல் வசனமா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here