
இந்தியா முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து இருப்பதால், அனைத்து மாநிலங்களில் உள்ள பள்ளிகளுக்கும் 2022-2023 ஆம் கல்வியாண்டுக்கான இறுதித் தேர்வுகள் முன்கூட்டியே நடத்தப்பட்டன. இதனால், தமிழகம், புதுச்சேரி, ஒடிஷா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளிகளுக்கும் கடந்த ஏப்ரல் மாத இறுதியில் இருந்தே கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த கோடை விடுமுறையை, மாணவர்கள் பயனுள்ள வகையில் களிப்பதற்காக, ஒருசில மாநிலங்களில் உள்ள பள்ளிகள், இவர்களுக்கு விட்டுப்பாடங்களை கொடுப்பது வழக்கம். மாணவர்களுக்கு இந்த விட்டுப்பாடங்களில் ஏற்படும் சந்தேங்களை தீர்ப்பதற்காக, ஒடிசா அரசின் கல்வித்துறை சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
அதாவது, ஒடிசாவில் உள்ள 30 மாவட்டங்களுக்கும் கட்டணமில்லா எண்கள் மற்றும் உதவி மையங்களைத் தொடங்கியுள்ளன. இதன் மூலம், மாணவர்கள் விடுமுறை வீட்டுப்பாடங்களை வெற்றிகரமாக முடிக்க முடியும். ஒடிசாவில் உள்ள பள்ளிகளுக்கு கோடை விடுமுறைக்கு பிறகு, ஜூன் 18ம் தேதி புதிய கல்வியாண்டு தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
To support school students in completing their summer vacation homework, S&ME Department has launched toll-free numbers & help desks for all 30 districts to ensure successful implementation of Holiday Homework Program. pic.twitter.com/f55G5DY6u5
— EducationOdisha (@SMEOdisha) May 2, 2023