
நாட்டில் எதிர்பாராத விபத்தினால் ஏற்படும் இழப்புகளுக்கு மாநில அரசுகள் இழப்பீடு தொகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் யானை, புலி, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் தாக்கி காயம் அடையும் உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வரும் இழப்பீடு தொகையை ஒடிசா மாநில அரசு உயர்த்தி உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதன்படி வனவிலங்குகள் தாக்கி,
- உயிரிழப்பவர்களின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சமாக கொடுத்த இழப்பீடு தொகை ரூ.6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
- 60%க்கும் அதிகமாக ஊனம் ஏற்பட்டால் ரூ.2.5 லட்சம்.
- 60%க்கும் குறைவாக ஊனம் ஏற்படும் பட்சத்தில் ரூ.1.5 லட்சம்,
- லேசான மற்றும் தற்காலிக காயங்கள் ஏற்பட்டால் ரூ.5,000.
- அரசு மருத்துவமனையில் இலவச சிகிச்சை அளிப்பதுடன் ஒரு வாரத்திற்கு மேல் சிகிச்சை பெற்றால் கூடுதலாக ரூ.5,000 வழங்கப்படும்.
- நெல் பயிர், தானியங்கள் சேதமடைந்தால் ரூ.20,000.
- நெல் அல்லாத பணப்பயிர்களுக்கு ரூ.25,000.
- வீடுகள் பகுதி சேதம் அடைந்தால் இழப்புக்கு ஏற்ப ரூ.10,000 வரை இழப்பீடு.
- என ஒடிசா மாநில தலைமை வனவிலங்கு காப்பாளர் S.K.போப்லி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.