இந்தியாவை காக்கப்போகும் கோடைகாலம், வெயிலில் 30 வினாடிகளில் கொரோனா சாகும் – அமெரிக்க சுகாதாரத்துறை

0

சீனாவில் தொடங்கி தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸினால் நாளுக்குநாள் உயிரிழப்புகள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகளின் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் தீவிரமாக உள்ளது. இந்நிலையில் அமெரிக்க சுகாதாரத்துறை வெளியிட்ட ஆய்வு முடிவுகள் இந்தியாவிற்கு நல்ல செய்தியாக உள்ளது.

சூரியஒளி பாதுகாக்கும்:

அமெரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்நாட்டு பாதுகாப்பு துறையின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இயக்குனரகம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளை வெளியிட்டு உள்ளனர். அதன்படி அதிக வெப்பமும் அதிக ஈரப்பதமும் கொரோனா நோய் பரவல் சங்கிலியை பலவீனப்படுத்தும் என்று தெரியவந்து உள்ளது.

மேலும் சூரிய ஒளியில் இருந்து வெளிவரும் புறஊதாக்கதிர்கள் கொரோனவை அழிக்கும் எனவும், 75 டிகிரி முதல் 80 டிகிரி வரை சூரிய ஒளி வெளிப்படும்போது கொரோனா வைரஸ் அழியக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா ஆயுட்காலம்:

சூரிய ஒளி 95 டிகிரி பாரன்ஹீட் அல்லது 38 டிகிரி செல்சியஸ் இருக்கும் பொழுது 80% அளவு ஈரப்பதமும், 18 மணிநேரம் என்ற வைரஸின் ஆயுட்காலமும் பாதியாக குறையும். மேலும் சூரிய ஒளியில் உள்ள ஐசோபிரைல் 30 வினாடிகளில் கொரோனவை கொல்லும். இதனால் அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதம் கொரோனா பரவுவதை தடுக்கும் என தெரிவித்து உள்ளனர்.

சூரிய ஒளி நேரடியாக தரைத்தளத்தில் படும் பொழுது கொரோனா தரையிலும், காற்றிலும் பரவுவது தடுக்கப்படுகிறது. இந்தியாவில் தற்போது கோடைகாலம் நிலவி வருவதால் சாதகமாக இது அமையும் எனவும் அவர்கள் தெரிவித்து உள்ளனர். இருப்பினும் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here