சுரங்க பாதைக்குள் விமானத்தை இயக்கி உலக சாதனை – இத்தாலியில் நடந்த சுவாரஸ்யம்!!

0

இஸ்தான்புல் நகருக்கு அருகில் உள்ள இரண்டு சுரங்கப் பாதைக்குள் விமானத்தை இயக்கிய விமானி ஒருவர் உலக சாதனையை படைத்துள்ளார்.

உலக சாதனை:

இத்தாலியைச் சேர்ந்த விமானி டேரியோ கோஸ்டா.  இவர் தன்னுடைய விமானம் சார்ந்த துறையில் ஐந்து விதமான உலக சாதனைகளை படைத்துள்ளார்.   அது தற்போது பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.  சமீபத்தில், டேரியோ கோஸ்டா என்பவர்,  புதுப்பிக்கப்பட்ட ஸ்வ்கோ எட்ஜ் 540 என்ற விமானத்தில் இந்த புதிய வரலாற்று சாதனையை பதிவு செய்துள்ளார்.  இது உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற உள்ளது குறிப்பிடத் தகுந்தது.


இவரது சாதனை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இஸ்தான்புல் நகருக்கு அருகே 5 ஆயிரத்து 200 அடி நீளமுள்ள இரண்டு சுரங்கப் பாதைகள் உள்ளன.  இந்த இரண்டு சுரங்க பாதைகளின் வழியாக ஸ்வ்கோ எட்ஜ் 540 விமானத்தை செலுத்தியுள்ளார். இந்த விமானம், குறிப்பிட்ட இரண்டு சுரங்க பாதைகளையும் மணிக்கு 150 மைல் வேகத்தில் கடந்து சென்றுள்ளது.


இது மட்டுமல்லாமல், சுரங்கத்தை 43 விநாடிகளில் கடந்தது மற்றும் தரையில் இருந்து வெறும் 3 அடி உயரத்தில் பறந்தது உள்பட பல்வேறு சாதனைகளை இந்த விமானத்தின் மூலம் டேரியோ கோஸ்டா நிகழ்த்தியுள்ளார்.  அவரது இந்த சாதனை சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு ஒரு உந்து சக்தியாக மாறி உள்ளது என்பதே உண்மை.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here